Sunday, January 1, 2012

January 2, திருப்தி

சங்கீதம் 4

அவர்களுக்குத் தானியமும் திராட்சரசமும் பெருகியிருக்கிறகாலத்தின் சந்தோஷத்தைப்பார்க்கிலும், அதிக சந்தோஷத்தை என் இருதயத்தில் தந்தீர். - சங்கீதம் 4:7

ஒவ்வொரு கலாச்சாரத்திலும் அறுவடை என்பது மிகவும் மகிழ்ச்சியான காலம் தான். தானியங்கள் உணவுக்காக கிடைத்திருப்பதுவும், அதிகமாக இருப்பதை விற்பதுவும் அடுத்த அறுவடை வரை மகிழ்ச்சியைத் தரக்கூடியது. தாவீது தனக்குக் கடவுள் தந்த மகிழ்ச்சியைப் பற்றிச் சொல்லும் போது அறுவடையில் தானியமும் திராட்சை ரசமும் பெருகியிருக்கும் போது மக்களுக்கு இருக்கும் மகிழ்ச்சியைவிட அவருக்கு அதிக மகிழ்ச்சி இருப்பதாகச் சொல்கிறார்.
கடவுள் தரும் மகிழ்ச்சி அறுவடை காலத்தைவிட ஏன் அதிக மகிழ்ச்சியாக இருக்கின்றது?:
* தானியங்கள் தீர்ந்து போனாலும் கடவுள் உடன் இருக்கிறார். தேவைகளைத் தருகிறார்.
* தானியங்களும், பானங்களும் தீர்க்கின்ற பசி மீண்டும் மீண்டும் வந்து கொண்டே இருக்கலாம். ஆனால் கடவுளின் பிரசன்னம் நம்முடன் விலகாமல் இருக்கும்.
* தானியங்கள் விஷயத்தில் இருப்பது போல எதிர்காலத்தைக் குறித்த கவலை தேவையில்லை. பாதுகாப்பாக வைக்க வேண்டுமே என்ற கவலையும் இல்லை. திருடர்கள் திருடவும் முடியாதது கடவுள் தரும் மகிழ்ச்சியாகும்.

சிந்தனை : திருப்தி என்பது மனிதனுக்கு ஏற்படவே முடியாது. திருப்தி தரும் கடவுள் உடன் இருந்தால் மனரம்மியம் கிடைக்கும்.
 
ஜெபம் : ஆண்டவரே உம்மிலே திருப்தி கண்டு இருப்பதற்காக உமக்கு நன்றியுடன் வாழ எனக்கு அருள் தாரும். ஆமென்.

--
http://micyell.com
Mobile : 09994258788

No comments: