Tuesday, January 17, 2012

January 18, சூப்பர் ஆஃபர்

சங்கீதம் 21


அவர் உம்மிடத்தில் ஆயுசைக்கேட்டார்; நீர் அவருக்கு என்றென்றைக்குமுள்ள தீர்க்காயுசை அளித்தீர். - சங்கீதம் 21:4


1930களில் ஒரு மனித உடலில் இருக்கும் உலோகங்கள் மற்றும் தனிமங்களின் மதிப்பு சுமார் முப்பது ரூபாய் என்று கணக்கிட்டார்கள். ஆனால் இந்தக்காலத்தில் கணக்குகள் வேறுவிதமாக இருக்கின்றன. டேவிட் சாடூஃப் என்னும் அறிவியல் நிபுணர், ஒரு மனிதனின் உடலில் இருக்கும் 10,200 யூனிட் இரத்தத்தை உறையச் செய்யும் வேதிப்பொருளானது விற்கப்பட்டால் பதினான்கு லட்சம் ரூபாய்கள் கிடைக்கும் என்கிறார். ஒரு மனிதனின் இரத்தத்தில் இருக்கும் நாற்பது கிராம் அளவுள்ள மையோப்ளோபின் சுமார் நாற்பத்தைந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ளது. உயிர்வேதியியல் அறிஞர்கள் ஒரு மனிதனின் உடலில் இருக்கும் வேதிப் பொருட்களை விற்றால் சுமார் இருபத்தேழு கோடி ரூபாய் கிடைக்கும் என்று சொல்கிறார்கள். அணு ஆராய்ச்சி நிபுணர் ஒருவர் சரியாக பயன்படுத்தப்பட்டால் ஒரு மனித உடலின் அணுக்கள் மூலம் ஒரு கோடி கிலோ வாட் மின்சாரத்தைத் தயாரிக்க முடியும் என்கிறார். இந்த மின்சாரம் நான்கு லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ளது.

மனிதனின் மதிப்பை பணத்தால் கணக்கிடுவது மிகவும் அறிவில்லாத செயலாகும். கடவுள் நம்மைத் தனது சாயலால் உருவாக்கியிருப்பதால் நாம் மதிப்பிட முடியாத அளவுக்கு அதிக மதிப்புள்ளவர்கள். நாம் உயிரோடு இருப்பது இன்னும் மதிப்பானதாகும். அரசன் கடவுளிடம் ஆயுசைக் கேட்டார் ஆனால் கடவுள் அவருக்கு என்றென்றைக்குமுள்ள தீர்க்காயுசை அளித்தார். இந்த உலகின் வாழ்க்கை முடிந்த பின்பும், நித்தியமான மோட்ச வாழ்க்கை நமக்கு இருக்கின்றது. இதுவே நமக்கு இருக்கும் மிக உன்னதமான மதிப்பாகும். ஆகவே உங்களைப் பற்றிய ஒரு மதிப்பான எண்ணம் உங்களுக்கே இருக்க வேண்டும். அவ்வாறே மற்றவர்களையும் உயர்வாக நினைக்க வேண்டும்.


சிந்தனை : இந்த உலகத்தில் வாழும் வாழ்க்கையானது, நித்திய வாழ்க்கைக்கு தகுதிப்படுத்துவதாக இருக்கின்றதா என்று நாம் கவனமாக இருக்க வேண்டும்.


ஜெபம் : ஆண்டவரே என்னை நானே தாழ்த்திக் கொள்ளாதபடி நீர் தந்திருக்கும் மதிப்பையும் நீர் தரவிருக்கும் நித்திய வாழ்வையும் புரிந்து மதிப்புடன் வாழ உதவி செய்யும். ஆமென்.


For Audio Tracks visit : DD-Tamil
For older posts visit : http://dropindeocean.blogspot.com/
--
Mobile : 09994258788

No comments: