லெந்து காலத்தைப் பற்றி பைபிளில் எங்கே இருக்கிறது என்று கேட்காதீர்கள், எனக்குப் பிடிக்கவில்லை என்று சொல்லுங்கள். அல்லது என் விசுவாசம் இதற்கெல்லாம் அப்பாற்பட்டது என்று சொல்லுங்கள். எங்களைப் போன்ற லெந்து காலத்தைக் கடைப்பிடிப்பவர்களை முட்டாள்கள் என்று தீர்ப்பு சொல்லிவிடாதீர்கள். நீங்கள் கவிதை எழுதலாம் ஆனால் நாங்கள் எழுதப் படிக்கிறோம். எங்கள் கிறுக்கல்களும் உங்கள் கவிதைகளும் தேவனுக்கு ஒன்று தான்.
திருமணம் பற்றி வேதாகமத்தில் இல்லை, ஏன் தாலி கட்டுகிறீர்கள், அல்லது மோதிரம் மாற்றிக் கொள்கிறீர்கள்?
சாப்பிடும் முன்பும் பிரயாணத்த்க்கு முன்பும் ஜெபம் செய்யச் சொல்லி நேரடியாக வேதாகமத்தில் இல்லை என்பதால் அதையெல்லாம் செய்யக்கூடாது என்று சொல்லலாமா?
வேதத்தின் அடிப்படையில் தான் எல்லாவற்றையும் செய்கிறீர்களா? எதிலும் சிறு விலகல் இல்லாத வேதாகமக் கிறிஸ்தவர்களா நீங்கள்? பரவாயில்லை எங்களைப் போன்ற பாவிகளுக்குத் தான் லெந்து காலம் தேவை.
நல்லது செய்வதற்கு ஒரு கலாச்சாரத்திலோ, பாரம்பரியத்திலோ ஒரு பழக்கம் இருந்தால் அதைப் பின்பற்றுவதில் தவறு என்ன?
லெந்து காலத்தைக் கடமைக்காக செய்பவர்களை நினைத்து லெந்து காலத்தையே குறை சொல்லாதீர்கள். திருச்சபைகளையும் ஊழியர்களையும் கூர்ந்து பார்த்தால் கிறிஸ்தவர்களாகவே நாம் இருக்க முடியாது. யாரையும் நம் சகோதர சகோதரிகள் என்று சொல்லிக் கொள்ள முடியாது.
ஆண்டவரே பாவிகள் கட்சியில இருக்காரு, நீங்க என்னப்பா நடுவுல? பாவிகளுக்குத் தானே இரட்சிப்பு வேண்டும்? தவறி விழுகிறவர்களுக்குத் தானே உதவி வேண்டும்?
நாற்பது நாட்களில் செய்யப்படும் பழக்கம் வாழ்நாளில் மறக்கப்படாது என்ற நம்பிக்கையில் தான் தடுமாறி ஏதோ செய்ய முயற்சிக்கிறோம். ஏழு தடவை விழுந்தாலும் எழுந்து நிமிர்ந்து நிற்க பலம் வேண்டும் என்று தான் வருடா வருடம் தடுமாற்றத்துடன் உபவாசம் செய்கிறோம். உதவி செய்யாவிட்டாலும் உபத்திரவம் செய்யாம்ல் விட்டுவிடுங்கள்.
கடுமையாகத் திட்டி விட்டதாக நினைக்காதீர்கள், அன்புடன் மன்னித்து ஏற்றுக் கொள்ளுங்கள். கெட்ட குமாரனாக இளையவனும் பெரியவனும் இருக்கலாம், ஆனால் தகப்பன் ஒருவர் தான். அவர் இளையவனின் திருப்பத்தைத் தான் கொண்டாடினார். நாம் ஒருவரை ஒருவர் ஏற்றுக் கொள்வோம். இந்தக் காலத்தில் சிறிது கர்த்தரிடம் நெருங்கி வருவதற்கான வாய்ப்புக்களைத் தேடுவோம்.

No comments:
Post a Comment