#40நாள்இயேசு
நாள் 1:
ஆதியிலே வார்த்தை இருந்தது.
வேற்றுக் கிரகங்களுடன் தொடர்பு கொள்ள பல மின்னனு சாதனங்கள் மூலம் தகவல்கள் அனுப்பப்பட்டு கொண்டிருக்கின்றன. “யாராவது இருக்கீங்களா? ஹலோ...” என்று பலகாலமாக ஆகாயத்துக்குள் ஒலிக்குறிப்புகள் அனுப்படுகின்றன. அப்படியே, ஏதாவது சத்தமோ, குறிப்புகளோ வருகின்றனவா என்றும் ஆண்டெனாக்கள் காத்திருக்கின்றன. இதில் ஒரு பிரச்சனை இருக்கிறது. வேறு கிரகங்களில் உயிர்கள் இருந்து அவைகள் அல்லது அவர்கள் தொடர்பு கொள்ளும் ஆற்றலுடன் இருப்பார்கள் என்றால் அவர்கள் நம்மைப் போலவே ட்ரான்ஸ்மிட்டர்கள், தகவல் தொடர்பு சாதனங்கள் வைத்திருப்பார்கள் என்று எப்படி நாம் எதிர்பார்க்க முடியும்?
அவர்கள் நம்மை விட பலமடங்கு முன்னேறினவர்களாக இருக்கலாம். அப்ப்டியென்றால் நமது சூப்பர் கம்ப்யூட்டர்களும் சாட்டிலைட்டுகளும் அவர்களுக்கு விளையாட்டு பொம்மையை விட சின்னவைகளாக இருக்கும். இப்போது டேப் ரிக்கார்டர்களை பயன்படுத்துவோரும் இல்லை. பழுது பார்ப்பவர்களும் இல்லை. சந்தன வீரப்பன் டேப் கொடுத்து அனுப்பினார், இப்போது பென் ட்ரைவ், வாட்ஸ் அப் மெசேஜ், க்ளவ்ட் (cloud) என்று போய்க்கொண்டிருக்கிறது.அல்லது அவர்களது ஐ ஃபோன்கள் நம்ம ஊர் சின்னப் பிள்ளைகள் டப்பாக்களில் நூல் கட்டி உரையாடும் ஃபோன்கள் போல இருக்கலாம்.
யார் உயர்ந்த தொழில் நுட்பத்தில் இருக்கிறார்களோ அவர்கள் தான் மற்றவர்களுக்காகத் தங்கள் நிலையைவிட்டு இறங்கி வந்து தகவல் பரிமாற்றம் செய்ய முயற்சிகளைத் துவங்க வேண்டும். இல்லையென்றால் தகவல் தொடர்பு என்பது சாத்தியமில்லை, அதற்கான முயற்சிகளும் குழப்பங்களாகவே இருக்கும்.
கடவுள் பற்றிய உணர்வு, கடவுளுடன் தொடர்பு கொள்ளும் ஆர்வம் நமக்கு இருந்தாலும், குணத்தின்படி பெரிய, எல்லாம் வல்ல, எல்லாம் அறிந்த, எங்கும் இருக்கும் கடவுள் நம் நிலைக்கு இறங்கி, இரங்கி வந்தால் மட்டுமே நாம் கடவுளுடன் தொடர்பு கொள்ள முடியும்.
அதைத்தான் வேதாகமம் மூலம், இயேசுவின் மூலம் கடவுள் செய்தார்.
ஆதியிலே வார்த்தை இருந்தது.
அது தேவனாய் இருந்தது.
அது தேவனிடத்தில் இருந்தது.
அந்த வார்த்தை இயேசு என்ற பெயரில் மாம்சமானது.
அதைப் பார்த்தவர்கள், அவருடன் மூன்றரை வருடங்கள்
வாழ்ந்தவர்கள் எழுதி வைத்தது தான் நற்செய்தி நூல்கள் எனப்படும் இயேசுவின் வரலாறு.
இவற்றல் தான் இயேசுவைப்பற்றி நாம் அறிந்து கொள்ளப் போகிறோம்.
இதன் மூலம் தான் கடவுள் எப்படிப்பட்டவர், நாம் அவருடன் எப்படித் தொடர்பு கொள்ள முடியும்.
அவர் எப்படி நம்முடன் தொடர்பு கொள்வார் என்பதைப் பற்றி எல்லாம் அறிந்து கொள்ள முடியும்.
கடவுளின் அளவுக்கு நம்மால் சிந்திக்கவோ, புரிந்து கொள்ளவோ முடியாது. அதனால் தான் நமக்குத் தேவையான அளவு வேதாகமத்தில் தகவல்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
இதற்கு மேல் நான் சொன்னால் நீங்கள் தாங்க மாட்டீர்கள் என்று தன் சீடர்களிடம் சொன்னார் இயேசு. அவரைப் பற்றி எழுதினால் அந்தப் புத்தகங்களை வைக்க இந்த உலகமே போதாது என்கிறார் அவரது சீடன் யோவான்.
கடவுள் மனிதனானார். நம்முடன் தகவல் தொடர்பு கொள்வதற்காக.
அந்தத் தகவலில் எத்தனையோ விபரங்கள் இருக்கலாம். ஆனால் ஒரே செய்தி தான் இருக்கிறது. அது தான் அன்பு. அன்பு என்ற செய்தி தான் இயேசு, வார்த்தை, வேதாகமம் என்று வெளிப்படுகிறது.
கடவுள் அன்பாகவே இருக்கிறார். அன்பு சிலுவையில் வெளிப்பட்டது. முன்பு அவர் நம்மை நேசித்ததால் நாம் அவரை நேசிக்கிறோம்.
கடவுளுடனான தகவல் தொடர்பில் அவர் தான் முதல் கடிதம், அல்லது முதல் அழைப்பை நமக்கு அனுப்புகிறார். ஏற்கனவே அந்த வேதம் பற்றிய பின்னணியில், கிறிஸ்துவை அறிந்த பெற்றோர் நமக்குக் கிடைத்தது ஒரு பாக்கியம் தான். அதே பாக்கியம் சில நேரங்களில் அலட்சியம் பண்ணப்படலாம். ஆபத்தாகவும் முடியலாம். அதனால் தான் இயேசுவைப் பற்றி நாமே அறிந்து கொள்ள வேண்டும், புரிந்து கொள்ள வேண்டும், அனுபவித்து உணர்ந்து கொள்ளப்பட வேண்டும். அவர் ரிங் பண்ணி விட்டார், சிலருக்கு ஹலோ சொல்லிவிட்டார். நாம் பதில் சொல்லப் போகிறோமா? உரையாடலை துவங்கி விட்டோமா? தொடர்கிறோமா? இந்த லெந்துக் காலம் அந்த வகையில் நம்மை உயிர்ப்பிக்கட்டும்.
ரிங் டோனைக் கேட்கும் அளவுக்கு நம் காதுகள் ஆயத்தமா? அழைப்பை ஏற்க நம் மனம் ஆயத்தமா? அவரைக் கேட்க மனதின் செவிகள் ஆயத்தமா? பதில் பேச நம் உதடுகள் ஆயத்தமா?
15 நிமிடங்கள் அமைதியாக ஜெபம், வேதம் எதுவும் இல்லாமல் சும்மா இருந்து பாருங்கள். பல சிந்தனைகள், செய்ய வேண்டிய வேலைகள் பற்றிய நினைவுகள் வரலாம். அமைதிப்படுத்திப் பாருங்களேன். மனசாட்சி என்னும் மொழியில், மிக அமைதியாக பேசுவார் கர்த்தர். அவர் சத்தம் கேட்க முடியாதபடி ஏதாவது தவறுகள் உங்கள் வாழ்க்கையில் இருக்கும் என்றால், அவற்றுக்காக உண்மையாகவே மனம் வருந்தி மன்னிப்பு பெற்றுக் கொள்ளுங்கள். உங்களுக்கே தெரியாமல் கடவுளுக்கு எதிரான பாவம் சிகனை, சொல், செயல்களி செய்திருந்தால் அவற்றை உணர்த்த சொல்லுங்கள்.
நீங்கள் மட்டுமே ஜெபம் என்ற பெயரில் அவருக்கு அனுப்பும் பட்டியலை இன்று நிறுத்தி வைத்துவிட்டு அவர் குரல் கேட்க உங்களை ட்யூன் பண்ணுங்கள்.
கர்த்தருடன் உரையாடல்கள் எவற்றைப் பற்றியெல்லாம் இருக்க முடியும்?
நாம் அவருடனும் அவர் நம்முடனும் உரையாட சாத்தியமான தலைப்புகள்.
- அவரைப் பற்றி.
- நம்மைப் பற்றி.
- பிறரைப் பற்றி.
- உலகைப் பற்றி.
- நேற்று.
- இன்று.
- நாளை.
- செய்ய வேண்டியவை.
- செய்யாமல் விட்டவை.
- செய்த செய்யக்கூடாதவை.
- எச்சரிக்கை.
- பாராட்டு.
- ஆறுதல்.
- உற்சாகம்.
- மனதில் ஓடும் சிந்தனைகள்.
- பிரச்சனைகள்.
- மகிழ்ச்சிகள்.
- வேத வசனங்கள்.
- வேத நாயகர்கள்.
- வேத போதனைகள்.
இதற்கு மேல் என்ன வேண்டும்?
யோவான் 1: 1-14 - இந்த வேதப்பகுதியில் இயேசுவுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் பெயர்களையும் அவரது குணங்களையும் பட்டியலிடலாம்.
ஒவ்வொன்றையும் பற்றி ஆராய, தியானிக்க ஆரம்பித்தால் ஒரு நாள் போதாது. சட்டென்று மனதில் படுகின்ற ஒன்றை நாள் முழுவதும், சிந்திக்கக் கிடைக்கும் இடைவெளிகளில் தியானம் செய்யலாம்
இயேசுவுக்கான பெயர்கள்:
1. வார்த்தை v. 1 வெளிப்படுத்தின விசேஷம் 19:13
இரத்தத்தில் தோய்க்கப்பட்ட வஸ்திரத்தைத் தரித்திருந்தார்; அவருடைய நாமம் தேவனுடைய வார்த்தை என்பதே. 1
2. தேவன் v. 1
3. ஒளி v. 4,5
4. ஜீவன் v. 4,5,9க்
5. மாம்சம் v. 14
6. ஒரே பேறான குமாரன். v. 14
7. கிருபை நிறைந்தவர்.
8. சத்தியத்தால் நிறைந்தவர். 14
இயேசுவின் குணாதிசயங்கள்:
1. சொந்தமானதில் வந்தார்
2. சகலத்தையும் உண்டாக்கியவர்
3. மூலவர் - எல்லாம் அவர் மூலமாய் உண்டாயிற்று.
4. பிரகாசிப்பிக்கிறவர்
5. கிருபையும் சத்தியமும் நிறைந்தவர்.
6. அதிகாரம் கொடுத்தார்.
7. மனிதருக்குள் வாசம் பண்ணுகிறார்.
8. தேவனோடு, தேவனாய் இருந்தார்.
பெயருக்கான அர்த்தம்:
யோவான் - கர்த்தர் கிருபையாய் இருந்தார். தயை செய்தார். John = Jehovah has been gracious; has shown favor.
இயேசு: Jehovah is Saviour. இரட்சகர்.
|
|
சகரியா
|
மரியாள்
|
|
காபிரியேல் தூதன்
|
காட்சி - ஆலயத்தில்
|
காட்சி - வீட்டில்
|
|
பணி
|
ஆசாரியன்
|
வீட்டுப் பெண்
|
|
வயது
|
80+
|
16+
|
|
முன்னறிவிப்பு
|
மகன் - பெயர் - யோவான் - குணங்கள் - சிறு விபரங்கள்
|
மகன் - பெயர் - இயேசு - குணங்கள்
|
|
நம்பிக்கை
|
சதுசேயனோ? தூதனில் நம்பிக்கை இல்லையா? - வயதாயிற்றே?
|
எப்படி ஆகும்? புருஷனை சேரவில்லையே? அப்படியே ஆகட்டும்.
|
|
ஆதாரம்
|
காட்சி - ஆலயத்தில் - விபரங்கள்
|
காட்சி - வீட்டில் - எலிசபெத்தின் அடையாளம்.
|
|
அற்புதம்
|
ஏற்காவிட்டாலும் நடந்தது - ஊமையானதும் ஒரு அற்புதம் தான்
|
ஏற்றுக் கொண்டு - நடந்தது.
|
|
சூழ்நிலை
|
அதிக வயது - மனைவிக்கும் தனக்கும்
|
கன்னி - புருஷனை சேராதவள்
|
|
பாடல்
|
மகன் பிறந்த பின் பாடினார் - வாய் திறந்த பின்
|
எலிசபெத்தைப் பார்த்ததுமே விசுவாசத்தில் பாடினாள்
|
|
தூதனின் செய்தி
|
பயப்படாதே
|
பயப்படாதே
|
|
|
|
|
|
|
யோவான்
|
இயேசு
|
|
பெற்றோர்
|
சகரியா.
எலிசபெத்
|
மரியாள்
வளர்ப்பு தகப்பன் யோசேப்பு
|
|
பெயர்
|
கருவில் உருவாகுமுன்னே கொடுக்கப்பட்டது
|
கருவில் உருவாகுமுன்னே கொடுக்கப்பட்டது
|
|
வயது
|
5 மாதம் மூத்தவர்
|
5 மாதம் இளையவர்
|
|
பணி
|
சத்தம் / குரல் - வனாந்தரத்தில்
|
வார்த்தை
|
|
பிறப்பு முன்னறிவிக்கப்பட்டது
|
காபிரியேல் - ஆலயத்தில் - தகப்பனுக்கு
|
காபிரியேல் வீட்டில் - தாய்க்கு. தகப்பனுக்கு உறுதி செய்யப்பட்டது.
|
|
பட்டம்
|
தீர்க்கதரிசி
|
தேவ குமாரன் / மனுஷ குமாரன்
|
|
வளரும் சிறுவர்கள்
|
பெலம், ஞானம், கர்த்தரின் கிருபை
|
வளர்த்தி, ஞானம், தேவ தயவு, மனித தயவு
|
|
தலைப்புகள்
|
மத்தேயு
|
மாற்கு
|
லூக்கா
|
யோவான்
|
|
அதிகாரம் 1
|
|
|
|
|
|
கர்த்தரே நித்திய வார்த்தை
|
|
|
|
1:1-5
|
|
கர்த்தர் நம்மைப் போல ஒருவரானார்
|
|
|
|
1:9-18
|
|
நற்செய்தி நூல் எழுத்தாளர்களின் அறிமுகம்
|
|
1:1
|
1:1-4
|
|
|
யோவானின் பிறப்பு அறிவிக்கப்படுகிறது
|
|
|
1:5-25
|
|
|
இயேசுவின் பிறப்பு அறிவிக்கப்படுகிறது
|
|
|
1:26-56
|
|
|
யோவான் ஸ்நானகன் பிறப்பு
|
|
|
1:57-80
|
|
|
|
|
|
|
|
No comments:
Post a Comment