எபிரெயர் 3
வீட்டை உண்டுபண்ணினவன் வீட்டைப்பார்க்கிலும் அதிக கனத்திற்குரியவனாயிருக்கிறான்; அதுபோல மோசேயைப்பார்க்கிலும் இவர் அதிக மகிமைக்குப் பாத்திராயிருக்கிறார். - எபிரெயர் 3: 3
ஜார்ஜ் வாஷிங்டன் கார்வர் என்னும் சர்வதேசப் புகழ்பெற்ற விவசாய வேதியியல் அறிஞர் பட்டாணி, சோயாபீன், கடலை, சீனிக்கிழங்கு போன்றவற்றுக்கான நூற்றுக்கணக்கான பயன்களைக் கண்டுபிடித்தார். பருத்தியை அதிகம் விளைவித்ததால் சத்துக்கள் இல்லாமல் இருந்த நிலத்தை சரி செய்து விவசாயிகளுக்கு உதவ நினைத்தார் அவர். இப்படிப்பட்ட தாவரங்களிலிருந்து அவர் முகச்சவர க்ரீம், சாலட் எண்ணெய், உடனடிக் காஃபி, வினிகர், குளிர் க்ரீம், செயற்கை மரச்சீனி மற்றும் சிறுவர்கள் வண்ணம் தீட்டப்பயன்படுத்தும் விஷம் இல்லாத நிறங்கள் ஆகியவற்றைச் செய்வதை இவர் கண்டுபிடித்தார். இவற்றையெல்லாம் எங்கிருந்து இவற்றையெல்லாம் கற்றீர்கள் என்று கேட்டதற்கு, பழைய புத்தகமாகிய வேதத்தில் இருந்து தான் என்று பதில் சொன்னார். வேதாகமத்தில் பட்டாணியைப் பற்றி எழுதியிருக்கின்றதா? என்று வியப்புடன் கேட்டவரிடம் கார்வர் சொன்னார், “பட்டாணியைப் பற்றி வேதாகமத்தில் இல்லை, ஆனால் பட்டாணியைப் படைத்தவரைப் பற்றி வேதாகமம் சொல்கிறது. பட்டாணியைக் கொண்டு நான் என்ன செய்ய வேண்டும் என்று காட்டும் என்று கேட்டேன் அவர் எனக்கு உதவி செய்தார்.”
படைப்புகளைவிட, படைக்கப்பட்டவர்களை விட படைத்தவராகிய கடவுள் பெரியவராவார். மோசே இஸ்ரவேல் மக்களுக்குப் பெரும் தலைவராக இருந்தார். அவர்கள் அதிக மதிப்பு வைத்திருந்தவர் மோசே. ஆனால் இயேசுவோ மோசேயைப் படைத்தவர் என்ற முறையில் மோசேயைவிடப் பெரியவர் என்று எபிரெயர் நிருபத்தின் ஆசிரியர் கூறுகின்றார். நாம் மதிக்கும் எந்தத் தலைவரும் நம்மைப் போல மனிதர் தான். நம்மைப் படைத்தவர் தான் கனத்துக்கும் மகிமைக்கும் உரியவர் ஆவார்.
சிந்தனை : படைப்பின் மேன்மை படைத்தவரை மகிமைப்படுத்துவதாக இருக்க வேண்டும்.
ஜெபம் : கர்த்தாவே உமக்குரிய கனத்தையும் மகிமையையும் யாருக்கும் கொடுக்காமல் எனக்கும் எடுக்காமல் இருக்கும் பக்தியை எனக்குத் தாரும். ஆமென்.
For Audio Tracks visit : DD-Tamil
micyellmedia@gmail.com
Mobile : 09994258788
No comments:
Post a Comment