மாண்புமிகு. மொர்தகாய்
எஸ்தர் :10
எஸ்தர் :10 :3 மொர்தெகாய் ராஜாவாகிய அகாஸ்வேருவுக்கு இரண்டாவதானவனும் , யூதருக்குள் பெரியவனும், ... தன் குலத்தாருக்கெல்லாம் சமாதானமுண்டாகப் பேசுகிறவனுமாயிருந்தான்.
ஆஃப்ரிக்காவில் ஊழியம் செய்துவிட்டு ஓய்வெடுக்கத் திரும்பிக் கொண்டிருந்தனர் ஒரு வயதான மிஷனரித் தம்பதியினர். அதே கப்பலில் அமெரிக்க அதிபரும் வேட்டையாடிவிட்டுத் திரும்பி வந்து கொண்டிருந்தார். மிஷனரி மனைவியிடம் சொன்னார், "நாம் கடவுளுக்காக உண்மையாக பணி செய்து திரும்பி வருகிறோம், நம்மைக் கண்டு கொள்ள ஒருவரும் இல்லை; ஆனால் இந்த மனிதன் வேட்டையாடிவிட்டு வரும் போது இருக்கின்ற மரியாதையைப் பார்த்தால் நாம் எங்கோ தவறு செய்து விட்டதாகத் தோன்றுகின்றது."
அன்று இரவு மீண்டும் மனைவியிடம் புலம்பினார் மிஷனரி. மனைவியும், "என்னிடம் சொல்வதைக் கடவுளிடம் சொல்லுங்களேன்" என்று சொல்ல படுக்கையறைக்குள் சென்று முழங்காலிட்டார் அவர். சிறிது நேரத்தில் மலர்ந்த முகத்துடன் திரும்பி வந்த அவர் சொன்னார், "நாடு திரும்பியதற்கு அதிபருக்குக் கிடைத்த வரவேற்பைப் பற்றிக் கடவுளிடம் சொன்னேன். கடவுள் என்னிடம் 'நீ இன்னும் உன் பரம தேசத்துக்கு வரவில்லையே?' என்று சொன்னது போல இருந்தது."
பலகாலம் அரண்மனை வாசலில் உட்கார்ந்து இருந்த மொர்தெகாய் உயர்த்தப்பட்டார். கடவுளிடம் உண்மையாக இருப்பவர்களுக்கு இந்த உலகத்திலேயும், அதையும் தாண்டி மறு உலகத்திலும் பலன் உண்டு. இந்த உலகத்தில் பலர் நம்மைக் கண்டுகொள்ளாமல் போனாலும், கடவுள் நம்மைக் கவனித்துக் கொண்டே தான் இருக்கின்றார்.
சிந்தனை : காத்திருக்குதல் எதிர்காலப் பலனை நன்றாக அனுபவிக்க நம்மைத் தகுதிப்படுத்தி நமது உண்மைத் தன்மையை உறுதிப்படுத்தும்.
ஜெபம் : உன்னதரே, உம் காலத்துக்குக் காத்திருக்க, உண்மையாக இருக்க உதவும். உயர்ந்தாலும், தாழ்த்தப்பட்டாலும், உம்மிடமிருந்து வரும் பலனுக்கு அது ஈடாகாது என்பதை உணர்த்தும். ஆமென்.
No comments:
Post a Comment