Sunday, November 25, 2012

தெனாவட்டு

தெனாவட்டு

எஸ்தர் :3

எஸ்தர் :3:2 மொர்தெகாய் அவனை வணங்கவுமில்லை, நமஸ்கரிக்கவுமில்லை

ஒரு எழுத்தாளரின் படைப்பு காந்தியிடம் கொடுக்கப்பட்டது. அதில் சிறப்பாக இருப்பதை எடுத்துக் கொள்ளலாம் என்றார்கள். காந்தி அந்த காகிதங்களை இணைத்திருந்த குண்டூசியை எடுத்துப் பத்திரமாக வைத்துவிட்டு, தாள்களை எறிந்துவிட்டார். ஏன் என்று கேட்டபோது அதில் உள்ள உபயோகமானதை நான் எடுத்துக் கொண்டேன் என்றாராம்.

 

மொர்தெகாய் கடவுளுக்கு மட்டுமே பயப்படக்கூடிய நேர்மையான மனிதன். தனக்கு மரியாதை கிடைக்க வேண்டும் என்ற பெருமையுடன் இருந்த ஆமானை அவன் கண்டு கொள்ளவே இல்லை. அரசனுக்கு நெருங்கியவனாக இருந்தாலும் கடவுளுக்கு மேலானவன் இல்லையே என்ற எண்ணம் மொர்தெகாய்க்கு இருந்திருக்கலாம்.

 

தன்னைப்பற்றி அதிகம் பெருமையுடன் திரிந்த ஆமானுக்கோ இது மிகவும் எரிச்சலைத் தந்திருக்கக் கூடும். எனவே தான் அவன் மொர்தெகாயை அவனது இனமான யூதர்களையே கூண்டோடு அழிக்கவும் சதி செய்தான். ராஜாவை ஒழிக்கத் திட்டம் தீட்டியவர்களைக் கண்டுபிடித்து ஒழிக்கக் காரணமாக இருந்த மொர்தெகாய் ராஜாவிடம் நல்ல பெயர் வாங்கிப் பெரிய ஆளாக மாற நினைக்கவில்லை. ஆனால் கடவுளுக்கு பயப்படு, அரசனுக்கு மரியாதை கொடு என்ற பாலிசி உள்ள மொர்தெகாய்க்கு, ஆமான் போன்ற சலசலப்புக்காரர்களை அலட்சியம் செய்வதைத் தவிர வேறு வழி இல்லை. இந்தத் தெனாவெட்டு தான் மொர்தெகாய்க்கு ஆபத்தாக மாறினாலும் கடவுளின் உதவியால் பின்னர் அந்த ஆபத்து மாறியது மட்டுமல்ல. மொர்தெகாய் எதிர்பார்க்காத மதிப்பும் மரியாதையும் அவரைத் தேடி வந்தது.

 

சிந்தனை : வீண் பந்தா கூடாது. அப்படிப்பண்ணுபவர்களைப் பெரிய ஆட்களாக நினைக்கவும் கூடாது.  ஒவ்வொருவருக்கும்  கொடுக்க வேண்டிய மரியாதையைக் கொடுக்க வேண்டும்.

ஜெபம் : ஆண்டவரே உம்மைத் தவிர வேறு யாரையும் வணங்காத, நமஸ்கரிக்காத சுத்த உள்ளம் தாரும். உம்மையே சார்ந்திருக்க உதவும். ஆமென்.

No comments: