ஆப்பு மரம்
எஸ்தர் :5
எஸ்தர் :5:14 ஐம்பதுமுழ உயரமான ஒரு தூக்குமரம் செய்யப்படவேண்டும் ;
ஊழல் மந்திரியை வீட்டுக்கு அனுப்ப நினைத்த அரசன் மறக்க முடியாத ஒன்றை வழியனுப்பும் பரிசாகக் கொடுக்க விரும்பினார். ஒரு அழகான மாளிகையைக் கட்டு என்று கட்டளையிட்டார் அரசன். கடைசி வாய்ப்பை நன்றாகப் பயன்படுத்த நினைத்து மட்டமான பொருட்களால் மாளிகையைக் கட்டினார் மந்திரி. வழியனுப்பு விழாவில் அதே வீடு பரிசாகக் கிடைத்தபோது மயங்கி விழுந்த மந்திரியின் மேல் உழுத்துப் போன கதவும் விழுந்தது.
மொர்தெகாய் மரண தண்டனை பெறும் அளவுக்கு எந்தத் தவறும் செய்யவில்லை. ஆமானுக்கு கூளைக் கும்பிடு போடாதது ஒன்றுதான் மொர்தெகாய் செய்த குற்றம். ஆனால் அரசனிடம் தனக்கு இருக்கும் நெருக்கத்தை வைத்து எதையும் செய்துவிடலாம் என்று நினைத்தான் ஆமான். ஆமானின் நண்பர்களும் உறவினர்களும் ஆமானை இன்னும் உசுப்பு ஏற்றிவிட்டு, மொர்தெகாயைக் கொல்ல வழி சொல்கிறார்கள்.
தங்களது பழிவாங்குதல் பிறருக்கும் தெரிந்து அவர்களும் தங்களுக்கு அடங்கி இருக்க வேண்டும் என்ற நினைப்பில் உயரமான தூக்குமரத்தை மொர்தெகாய்க்காக செய்து வைத்தார்கள். நமது வாழ்வில் நாம் பிறர் மேல் கோபமாக இருக்கும் போது பழி வாங்கும் மனநிலையில் இருக்கும் போது எந்த செயலையும் செய்யக் கூடாது. நாம் செய்வதை எப்போதுமே புகழ்ந்து பேசுபவர்களின் சொற்படியே எப்போதும் நடந்துவிடக்கூடாது. அது ஆமான் கதையைப் போல நமக்கே வினையாக முடிந்துவிடும்.
சிந்தனை : பிறரைப் பழிவாங்குவதில் நாம் காட்டும் அக்கறையை, பிறரைப் புரிந்து கொள்வதில் மதிப்பதில் காட்டினால் நன்மையே கிடைக்கும்.
ஜெபம் : நீதியின் கடவுளே, பழிவாங்குதல் உமக்கு உரியது என்பதைப் புரிந்து கொள்ளவும், எதிரிகளை நேசிக்கவும் எனக்கு வாய்ப்புக்கள் தாரும். ஆமென்.
No comments:
Post a Comment