Monday, November 26, 2012

சூப்பர் உமன்

சூப்பர் உமன்

எஸ்தர் :4

எஸ்தர் :4:16 நான் செத்தாலும் சாகிறேன்

இந்திரா காந்தி, கல்பனா சாவ்லா, அன்னை தெரசா போன்ற பல தலைவிகளை நம் நாடு கண்டிருக்கின்றது. அவர்கள் தங்கள் நாட்டு மக்களுக்காகத் தங்கள் உயிரையும் தரும் அளவுக்கு தைரியம் உள்ளவர்களாக இருந்ததால் தான் அவர்களைத் தலைவிகள் என்கிறோம். நாம் நம் நாட்டு மக்களுக்காக தியாகம் செய்யும் அளவுக்கு நாட்டுப் பற்று இருக்க வேண்டும். நேர்மையாகவும் அமைதியாகவும் மக்களுக்காக உழைப்பதற்கு கடவுள் பயம் கண்டிப்பாக இருக்க வேண்டும்.

எஸ்தருக்குத் தன் மக்கள் மேல் இருந்த அன்பினாலும் பற்றினாலும் தான் செத்தாலும் சாகிறேன் என்று துணிச்சலுடன் அரசனிடம் செல்லத் திட்டமிட்டாள். அத்துடன் கடவுள் மேலிருந்த பக்தி மற்றும் நம்பிக்கையினால் தான் மக்களைத் தனக்காக உபவாசம் இருக்கும்படியும் சொன்னாள். வீணாகப் போய் உயிரைக் கொடுப்பதுவும் தவறு, வாய்ப்பு வரும் போது அமைதியாக இருப்பதுவும் அதைவிடத் தவறு. எஸ்தர் தனது பக்தியுள்ள வளர்ப்புத்தந்தை மொர்தெகாயின் ஆலோசனைகளுக்குக் கீழ்ப்படிந்ததுடன் ஞானமாகவும் செயல்பட்டாள்.

அவளது தியாக மனதிற்குக் கடவுள் பலன் கொடுத்தார். அவள் ஜெபித்தது போலவே ராஜாவின் மனதில் எஸ்தர் மேல் தயவு கிடைத்தது. எஸ்தரின் விண்ணப்பத்தை அரசன் கேட்டார். மக்களின் உபவாச ஜெபத்துக்கும், மொர்தெகாயின் சேவைக்கும் பக்திக்கும் கடவுள் பலன் கொடுத்தார். பெரும் அழிவிலிருந்து யூதர்கள் காக்கப்பட்டார்கள். நீதி கிடைத்தது. கெட்ட குணமுள்ள ஆமானின் சதி வெளிப்பட்டு அவனுக்கே தண்டனையும் கிடைத்தது.

சிந்தனை : இந்த உலகத்தில் நாம் வாழும் வாழ்க்கை ஒன்றே ஒன்று தான். சாதனைக்காகவும் பெயருக்காகவும் உயிரைக் கொடுக்க வேண்டாம். உயிரை விட மேலாக நம் பொறுப்பை நினைத்தால் கடவுள் பாதுகாப்பையும் கொடுத்த பணிகளையும் நிறைவேற்ற உதவி செய்வார்.

ஜெபம் : ஆண்டவரே, என் உயிரைப் பெரிதாக நினைக்காமல் நீர் என் மூலம் செய்ய நினைக்கின்றவற்றைப் பெரிதாக நினைத்து வாழ உதவும். ஆமென்.

No comments: