From: mic yell <micyellmedia@gmail.com>
Date: 2012/11/19
Subject: சோகப்பார்ட்டி
To: micyell.dropindevo@blogger.com
சோகப்பார்ட்டி
எஸ்தர் : 1
எஸ்தர் : 1:19 ... வஸ்தி இனி ராஜாவாகிய அகாஸ்வேருவுக்கு முன்பாக வரக் கூடாது...
177 தடவைகள் குடித்துவிட்டு கலாட்டா செய்ததற்காக ஆமோஸ் வாட்சன் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவர் குடியை நிறுத்துவதற்கு ஒரு சிங்கம் தான் உதவி செய்தது. மிருகக்காட்சி சாலையில் சிங்கத்தின் கூண்டுக்குள் ஏறிக் குதித்ததால், அவர் கழுத்தை சிங்கம் சுவை பார்த்தது. கால்கள் முறிந்தன. ஒரு காவலர் சிங்கத்தைத் தாக்கி குடிமகனைக் காப்பாற்றினார். அவர் மருத்துவமனையில் தனது படுக்கையில் இருக்கும் போது தனது குடியை நிறுத்திவிட்டதாகச் சொன்னார்.
குடித்தவர்களின் பேச்சுக்களும் செயல்களும் விசித்திரமானதாகவே இருக்கும். ராஜா அகாஸ்வேரு குடி மயக்கத்தில் இருந்த போது தனது மனைவியை அழகிப் போட்டி போல விருந்தாளிகளுக்கு முன்பாக வந்து நிற்கும்படி சொன்னார். அரசி மறுத்ததால், குடியின் மயக்கமும், கோபமும் சேர்ந்து கொள்ள அவருடன் குடித்துக் கொண்டிருந்தவர்களும் தூண்டி விட, இனி வஸ்தி ராஜாவுக்கு முன்பாக வரக்கூடாது என முடிவெடுத்தார்கள்.
ஆண் ஆதிக்கம், பெண் விடுதலை என்று நாம் பேசிக்கொண்டு இருந்தாலும், சில விஷயங்கள் எல்லா காலத்திலும் எல்லா கலாச்சாரத்துக்கும் பொருந்துவதாகவே இருக்கின்றது. உதாரணமாக குடி குடியைக் கெடுக்கும் என்பதுவும், ஒருவரை ஒருவர் மதிக்க வேண்டும், பெண்கள் ஆண்களுக்கு அடிமைகள் அல்ல. என்றாலும் ஆண்களைச் சார்ந்தே பெண்கள் வாழவேண்டியுள்ளது போன்ற விதிகள் இருக்கின்றன.
அரசனின் குடி கடவுளின் சித்தத்தை நிறைவேற்ற ஒரு காரணமாக இருந்தது என்றாலும், குடியும் பெண்களை அடிமைப்படுத்துவதுவும் தவறானவைகள் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். கடவுள் மனித வரலாற்றைத் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தாலும் நீதிக்கு எதிராக எந்த செயலையும் செய்வதில்லை.
சிந்தனை : பார்ட்டிகளில் குடித்துவிட்டுப் பேசும் பேச்சுக்கள் எத்தனையோ குடும்பங்களை சீரழித்திருக்கின்றன.
ஜெபம் : பரிசுத்தரே, குடி போன்ற தீய பழக்கங்களில் விழுந்துவிடாதபடி காத்துக்கொள்ளும், அப்படிப்பட்ட தீய பழக்கமுள்ளவர்களிடமிருந்து எங்களை இரட்சித்தருளும். ஆமெ
No comments:
Post a Comment