Saturday, November 24, 2012

பாசமலர்

 

பாசமலர்

 

எஸ்தர் :2

எஸ்தர் :2 : 7 மொர்தெகாய் அவளைத் தன் குமாரத்தியாக எடுத்துக்கொண்டான்.
பால் என்பவருக்கு அவரது அண்ணன் ஒரு கார் பரிசாகக் கொடுத்திருந்தார். புதிய காரை ஒரு தெருப்பையன் உற்றுப்பார்த்துக் கொண்டிருந்தான். "இந்த கார் உங்களோடதா சார்" என்றான் அவன். பால் அவனிடம் "ஆமா, இது என் அண்ணன் எனக்குப் பரிசாகக் கொடுத்தது" என்றார். "எனக்கும் இப்படி .... " என்று இழுத்தான் பையன். "எனக்கும் இப்படி அண்ணன் இருந்தால் நல்லா இருக்கும்" என்று தான் அவன் சொல்லுவான் என்று நினைத்தார் பால். ஆனால், "எனக்கும் இப்படி என் தம்பிக்கு கார் வாங்கிக் கொடுக்க வாய்ப்பு இருந்தால் நல்லா இருக்கும்" என்று தான் அவன் சொன்னான்.

பால் அந்தத் தெருப்பையனை காரில் வைத்து ஒரு ரவுண்ட் அடித்தார். அவன் அவரிடம் "என் தம்பிக்கும் இந்த காரைக் காட்டலாமா?" என்று கெஞ்சிக் கேட்டான். பால் சரி சொல்லவும், வீட்டிற்குப் போய் கால்கள் நடக்க முடியாமல் இருந்த சிறுவனை வெளியே தூக்கிக் கொண்டு வந்தான் தெருப்பையன். அவர்களது பாசத்தைப் பார்த்து உருகிப் போன பால் தம்பியையும் அழைத்துக் கொண்டு அடுத்த ரவுண்ட் அடித்தார்.

கடவுளின் சாயலில் படைக்கப்பட்ட நாம் அவரது சிறந்த குணங்களின் ஒன்றாகிய பாசத்தைப் பிறரிடம் காட்டுகிறோம். மொர்தெகாய் தனது சித்தப்பா மகளாகிய எஸ்தரைத் தனது மகளாகவே வளர்த்தார். எஸ்தரின் பெற்றோர் இறந்து போயிருந்தாலும் மொர்தெகாய் இருந்ததால் அவளுக்கு அந்தக் குறை தெரியாமலேயே இருந்தது. இப்படிப்பட்ட அன்பு எல்லாக் குடும்பங்களிலும் காட்டப்பட்டால்  அனாதைகள் என்ற சொல்லே இந்த உலகத்தில் இல்லாமல் போய்விடும். சிறிது தியாகமும், சுயநலமில்லாத அன்பும் தான் தேவை. இந்த உலகம் பரதீசாக மாறிவிடும்.

 

சிந்தனை : உறவினர்களே ஒருவருக்கு ஒருவர் சண்டை போடுவது சாத்தானின் குணம். அறிமுகமில்லாதவர்களுக்கும் அன்பு காட்டுவது தெய்வீக குணம்.

 

ஜெபம் : கர்த்தாவே என் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு ஆதரவு தர எனக்கு உதவும். ஆதரவு இல்லாத சூழ்நிலைகளில் எனக்குப் பிறர் மூலம் ஆறுதலைத் தாரும். ஆமென்.

1 comment:

maddy-koprandy said...

Nalla thought anna, I like it :)