Wednesday, July 11, 2012

July 12, தூதன் அல்ல

எபிரெயர் 1


இவர் அவருடைய மகிமையின் பிரகாசமும், அவருடைய தன்மையின் சொரூபமுமாயிருந்து, சர்வத்தையும் தம்முடைய வல்லமையுள்ள வசனத்தினாலே தாங்குகிறவராய், தம்மாலேதாமே நம்முடைய பாவங்களை நீக்கும் சுத்திகரிப்பை உண்டுபண்ணி, உன்னதத்திலுள்ள மகத்துவமானவருடைய வலதுபாரிசத்திலே உட்கார்ந்தார். - எபிரெயர் 1:3


தேவைக்கு அதிகமாக கடைகளில் வந்திருக்கும் தேவதூதர்கள் பற்றிய புத்தகங்கள் கிறிஸ்தவ மற்றும் பிற மத்ததவர்கள் நடுவில் அதிகப் பிரபலமாக இருக்கின்றன. தேவதூதர்களைப் பற்றி மட்டுமே குறிப்பிடும் ஏஞ்சல் டைம்ஸ் என்னும் பத்திரிக்கை வாரம் இருமுறை வெளிவந்துகொண்டிருக்கின்றது. தேவதூதர்களைப் பற்றிய வல்லுனர்களின் எழுத்துக்கள் இந்தப் பத்திரிக்கையில் அதிகம் இடம்பெறுகின்றதாம்.

தேவதூதர்கள் ஆண்களா, பெண்களா, பொதுவானவர்களா, அவர்களுக்கு இறக்கைகள் உண்டா, மனிதர்கள் உருவத்தில் வருவார்களா? என்றெல்லாம் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாகப் பலரும் பலவிதமாகப் பேசிக்கொண்டும் எழுதிக் கொண்டும் இருக்கின்றனர். இதன் நடுவே இயேசுவும் ஒரு தேவதூதன் தான் என்று சொல்கிறவர்களும் இருக்கின்றார்கள். எபிரெயர் புத்தகத்தை எழுதியவர் இயேசு ஒரு தூதன் அல்ல என்று விளக்கமாகச் சொல்கிறார். இயேசு (1) பிதாவாகிய கடவுளின் மகிமையின் பிரகாசமும், (2) அவருடைய தன்மையின் சொரூபமுமாயிருக்கிறவர். (3) சர்வத்தையும் தம்முடைய வசனத்தினாலே தாங்குகிறவர், (4) தம்மாலே தாமே மனிதர்களின் பாவங்களை நீக்கும் சுத்திகரிப்பை உண்டு பண்ணினவர் இப்படிப்பட்டவர் ஆண்டவராகத் தான் இருக்க முடியும். ஏனென்றால் தூதர்களும் நம்மைப் போல கடவுளால் உருவாக்கப்பட்ட சிருஷ்ட்டிகள் தாம். இயேசுவோ கடவுளின் தன்மையின் சொரூபம், அதாவது கடவுளுக்கு சமமானவர். கடவுளாகவே இருப்பவர் ஆவார். அவர் மனிதனாக வந்ததால் தான் நம்முடைய பாவங்களை நீக்கும் சுத்திகரிப்பை அவரால் ஏற்படுத்த முடிந்தது. தூதனாக இருந்தால் அவர் பலியாக மாறியிருக்க முடியாது.


சிந்தனை : தூதர்களைப் படைத்தவர் தூதர்களிலும் சிறியவராக்கப்பட்டார் - நமக்காக, நம் பாவங்கள் சுத்திகரிக்கப்பட.


ஜெபம் : இயேசுவே உமது தியாக பலிக்காக நன்றி. நான் உம்மைத் தொழுது கொண்டு பரிசுத்த வாழ்க்கை வாழ உதவி செய்யும். ஆமென்.


For Audio Tracks visit : DD-Tamil

For Older Posts visit : http://dropindeocean.blogspot.com/
--
http://micyell.com
micyellmedia@gmail.com
Mobile : 09994258788

No comments: