எரேமியா 21
இதோ, நான் உங்கள் முன்னே ஜீவவழியையும் மரணவழியையும் வைக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். - எரேமியா 21:8
முன்னாள் அமெரிக்க அதிபரான ரொனால்ட் ரீகனுக்கு வாழ்க்கையில் தீர்மானங்களை எடுப்பதில் பெரிய பாடம் ஒன்றை சிறுவயதிலேயே கற்றுக் கொண்டார். அவரது அத்தை செருப்புக் கடைக்குச் சென்று அவருக்குக் காலணி ஒன்று செய்யச் சொன்னார்கள். செருப்புச் செய்பவர் ரீகனிடம், உனக்கு சதுரமான முன்பக்கம் உள்ள ஷூ வேண்டுமா, வளைவான முன்பக்கம் வேண்டுமா என்று கேட்டார். குழம்பிய ரீகனுக்கு ஒன்று அல்லது இரண்டு நாட்கள் அவகாசம் கொடுக்கப்பட்டது. சில நாட்களுக்குப் பின் செருப்பு செய்பவர் முடிவு செய்துவிட்டாயா என்று ரீகனிடம் கேட்டார். இன்னும் முடிவு செய்யலியே என்றான் சிறுவன் ரீகன். ஷீக்கள் வீட்டுக்கு வந்தபின்பு ரீகனுக்கு ஒரு அதிர்ச்சியும் காத்திருந்தது. அவரது ஷீக்களில் ஒன்று சதுர முகப்புடனும், அடுத்தது வளைந்த முகப்புடனும் இருந்தது. “ஒவ்வொரு நாளும் எனது ஷீக்களைப் பார்க்கும் போதும் ஒரு பாடத்தைத் திரும்பத்திரும்பக் கற்றுக் கொண்டேன் - உனக்காக நீ தீர்மானம் செய்யாவிட்டால், இன்னொருவர் உனக்காகத் தீர்மானம் எடுப்பார்.”
நமக்கு முன்பாகக் கடவுள் உயிர்தரும் வழியையும், மரண வழியையும் வைத்து நம் கையில் தேர்ந்தெடுக்கும் பொறுப்பைக் கொடுத்திருக்கின்றார். ஆதாம் ஏவாளின் சம்பவம் நமக்கு முன் உதாரணமாக இருக்கின்றது. இஸ்ரவேலரின் வரலாறு நமக்குப் பாடமாக இருக்கின்றது. ஆண்டவர் நம்மை அடிமைகளாக நடத்தாமல் சுதந்தரமாகத் தேர்ந்தெடுக்கும்படி நமக்கு மதிப்பு தந்திருக்கிறார். நானே வழி என்ற இயேசுவை நம் சொந்தமாக்கிக் கொண்டால், நானே ஜீவன் என்று சொன்ன அவரே நம்மை நடத்திச் செல்லுவார்.
சிந்தனை : எனக்காக நான் தீர்மானம் எடுக்காவிட்டால் கடவுள் எனக்காகத் தீர்மானம் செய்யமாட்டார். சாத்தான் மற்றவர்களை மூலம் எனக்காகத் தீர்மானங்கள் செய்ய வைப்பான்.
ஜெபம் : கர்த்தாவே நீர் காட்டும் வழியில் செல்ல, அதையே தேர்ந்தெடுக்க எனக்கு உதவி செய்யும். ஆமென்.
For Audio Tracks visit : DD-Tamil
micyellmedia@gmail.com
Mobile : 09994258788
No comments:
Post a Comment