எரேமியா 17
கர்த்தராகிய நானே ஒவ்வொருவனுக்கும், அவனவன் வழிகளுக்கும் செய்கைகளின் பலன்களுக்கும் தக்கதைக் கொடுக்கும்படிக்கும், இருதயத்தை ஆராய்கிறவரும் உள்ளிந்திரியங்களைச் சோதித்தறிகிறவருமாயிருக்கிறேன். - எரேமியா 17:10
ஏ டி எம் கொள்ளைகள் மற்றும் பல குற்றங்களைச் செய்தவர்கள் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் பிடிபட்டிருக்கிறார்கள். மும்பையில் தீவிரவாதிகளின் தாக்குதலின்போது கசாப் பிடிபட்டதற்கும், அவன் குற்றவாளி என்பதை நிரூபிப்பதற்கும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த அவனது உருவம் தான் காரணமாக இருந்தது.
நமது உள்ளங்களில் இருக்கும் எண்ணங்களை ஆராய்ந்து அறிந்து வைத்திருக்கிற கடவுள் நமது எண்ணங்களையே நமக்கு எதிரான சாட்சிகளாகவும், நமக்குக் கிடைக்கவிருக்கும் தீர்ப்புக்கான ஆதாரமாகவும் வைத்திருப்பார். நமது எண்ணங்கள் நல்லவைகளாக இருந்தால் அதற்கு ஏற்ற நல்ல பலன்கள் நமக்குக் கிடைக்கும்.
அநியாயாயமாய் ஐசுவரியத்தைச் சம்பாதிக்கிறவன் முட்டையிட்டு அவயங்காத்தும், குஞ்சுபொரிக்காமற் போகிற கவுதாரிக்குச் சமானமாயிருக்கிறான்; அவன் தன் பாதி வயதிலே அதைவிட்டு, தன் முடிவிலே மூடனாயிருப்பான் என்று கடவுள் சொல்லும் போது நமது இந்த உலகத்து முயற்சிகள் எதுவாக இருந்தாலும் கடவுள் தரும் பலன் தான் இறுதியானதாக இருக்கின்றது என்கிறார். மனித முயற்சிகள் முட்டை இடலாம், அடை காக்கலாம் ஆனால் குஞ்சு பொரித்தல் என்பது கடவுள் தரும் பலன் என்கிறார். மனிதன் தன் கடின உழைப்பின் பயனை அனுபவிக்க முடியாமல் போவது கடவுளின் தீர்ப்பு தான். மேலும் தங்கள் முயற்சியை மட்டுமே நம்பி இருக்கிறவர்களின் இருதயத்தை அறிந்திருக்கிற கடவுள் அவர்களை மூடர்கள் என்கிறார். இப்போது அவர்களைப் பார்த்தால் அறிவாளிகளைப் போல இருக்கும். அவர்களும் தங்களைப் பெரிய ஞானிகள் என்று பெருமைப் பட்டுக் கொள்ளலாம், ஆனால் முடிவில் அவர்கள் மூடர்கள் என்பது நிரூபிக்கப்படும்.
சிந்தனை : கண்காணிப்பு கேமராக்கள் நம் உருவத்தைப் பதிவு செய்யும். கடவுளின் கண்கள் நமது இருதயத்து நினைவுகளை அறிந்து ஆராயும்.
ஜெபம் : கர்த்தாவே, இந்தக் காலத்தைவிட வரும் காலம் தான் எது ஞானம் என்பதைக் காட்டும் என்பதால் பொறுமையாகவும், உண்மையாகவும் வாழ எனக்குப் பெலம் தாரும். ஆமென்.
For Audio Tracks visit : DD-Tamil
micyellmedia@gmail.com
Mobile : 09994258788
No comments:
Post a Comment