எரேமியா 16
என் கண்கள் அவர்களுடைய எல்லா வழிகளின்மேலும் நோக்கமாயிருக்கிறது; அவைகள் என் முகத்துக்கு முன்பாக மறைந்திருக்கிறதில்லை. - எரேமியா 16:17
ஒரு தத்துவ ஞானியும், இறையியல் அறிஞருமான சோரன் கீர்க்கிகார்ட் இவ்வாறு சொன்னார், “ஒரு பொழுது போக்குசாலையில் மேடையின் பின் பகுதியில் தீப்பிடித்துவிட்டதாம். கோமாளி மக்களிடம் வந்து ஆபத்தைப் பற்றி எச்சரித்தானாம். அதையும் ஒரு ஜோக் என்று நினைத்து மக்கள் மகிழ்ச்சியில் கைதட்டினார்கள். அவன் இன்னும் அதிக சத்தமாக எச்சரித்தான். அவர்கள் இன்னும் சத்தமாகக் கத்தினார்கள். ஆகவே இந்த உலகமும் எல்லா ஞானத்தையும், எச்சரிப்புகளையும், நகைச்சுவை என்று பாராட்டும் சத்தத்துடனேயே முடிவுக்கு வரும் என்று நினைக்கிறேன்.”
கடவுளின் எச்சரிப்பு எரேமியா போன்ற அர்ப்பணிப்புள்ள அவரது ஊழியர்கள் மூலம் வருகின்றது. ஆனால் அதை ஒரு பொழுது போக்காகவோ, நகைச்சுவையாகவோ எடுத்துக் கொள்ளும் மக்கள் இன்றும் இருக்கின்றார்கள். ஆனால் கடவுளின் கண்கள் நம் அனைவரையும் கவனித்துக் கொண்டிருக்கின்றது. அவரது பார்வைக்கு முன்பாக நமது எந்த செயல்களும் மறைந்திருக்கிறதில்லை. நமது நல்ல செயல்கள் தீய செயல்கள், நமக்குச் செய்யப்படும் கொடுமைகள் அனைத்துமே அவருக்கு முன்பாகத் வெளிப்படையாக இருக்கின்றன. எனவே நாம் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும், ஆறுதலுடனும் இருக்கலாம். கடவுள் சொல்கிறார், “இதோ, இப்பொழுது நான் அவர்களுக்குத் தெரியப்பண்ணுவேன்; என் கரத்தையும் என் பெலத்தையுமே அவர்களுக்குத் தெரியப்பண்ணுவேன்; என் நாமம் யேகோவா என்று அறிந்துகொள்வார்கள்.”
எரேமியா ஒரு கோமாளி அல்ல, கடவுள் மகா பெரியவர் என்பதை இஸ்ரவேலர் தெரிந்து கொண்டார்கள் ஆனால் அவர்கள் தாமதித்ததால் அவர்களில் பலர் அகதிகளாகப் பல நாடுகளில் சிதறடிக்கப்பட்டு சீரழிந்து போனார்கள்.
சிந்தனை : கேமராவின் முன் அசாதரணமாக செயல்படும் நாம் கடவுளின் கண்களின் முன் எத்தனை ஒழுங்காக இருக்க வேண்டும்?
ஜெபம் : எங்கும் நிறைந்தவரே, உமது எச்சரிக்கைகளையும், வாக்குத்தத்தங்களையும் முழுமையாக நம்பி, ஒழுக்கமும், நம்பிக்கையுமுள்ள வாழ்க்கை வாழ உதவும். ஆமென்.
For Audio Tracks visit : DD-Tamil
micyellmedia@gmail.com
Mobile : 09994258788
No comments:
Post a Comment