Sunday, March 17, 2019

#40நாள்இயேசு நாள் 11

#40நாள்இயேசு

நாள் 11

நண்பர்களின் விசுவாசம் வியாதியுள்ளவருக்கு சுகம் கொடுத்தது.

நண்பனுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு ஒரு புதுமையான வழியைக் காட்டியது.

இயேசுவை சுற்றியிருந்த கூட்டம் அவர்களுக்குப் பெரியதாகத் தெரியவில்லை. வீட்டின் ஓடுகளை திறந்து கட்டிலைக் கயிற்றில் கட்டி இயேசுவுக்கு முன் இறக்கிவிட்டார்கள்.

இயேசு சுகமாக்கினார். உன்பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டன என்றார்.

மகன் சுகவீனமாக இருப்பதாக ஒருவர் சொன்னார். இயேசுவின் வார்த்தையை நம்பிப் போனார். சுகம் கிடைத்தது.

விசுவாசம் இல்லாமல் 38 வருடங்களாக சுகவீனமாகப் படுத்திருந்த ஒருவரைத் தேடிப் போய் நீ சுகமாக விரும்புகிறாயா? என்று கேட்கிறார் இயேசு.

அவர் மீது விசுவாசம் வைத்தவர்களுக்கு சுகம் கொடுக்கிறார், அற்புதங்கள் செய்கிறார்.

விசுவாசம் இல்லாதவர்களைப் பார்த்து அதிசயப்படுகிறார்.

விசுவாசத்துக்கு வாய்ப்பில்லாத யூதரல்லாதவர்களின் விசுவாசத்தைக் கண்டு ஆச்சர்யப்படுகிறார்.

அற்புதம் நடத்துவதற்காக லாசருவின் கல்லறைக்குத் தாமதமாகச் செல்கிறார்.

விசுவாசம் இல்லாத ஊர்களில் அவரால் அற்புதம் செய்ய முடியவில்லை.

தன்னை விசுவாசித்தவர்களுக்கு மட்டுமே அவர் உயிரோடு எழுந்த பின் காட்சி கொடுத்தார். ஏரோது, பிலாத்து, பிரதான ஆசாரியர்கள், ரோம வீரர்கள், யூக மக்கள் முன் போய்ன்நின்று, “நான் செத்துப் பொழச்சவண்டா” என்று பஞ்ச் பாடல் பாடவில்லை.


இவைகளில் இருந்து ஒரு முக்கியமான உண்மை தெரிகிறது. விசுவாசம் என்பதைவிட அதைத் துவக்கி முடிக்கிற இயேசு தான் முக்கியமானவர். அவர் இல்லாமல் நம்மால் விசுவாசிப்பது கூட இயலாது. அவர் இருந்தால் அற்பமான விசுவாசம் இருந்தாலும் அற்புதங்கள் நடக்கும்.

No comments: