Wednesday, March 6, 2019

#40நாள்இயேசு

நாள் 2:

நாள் 2:

தேவதூதர்கள், தரிசனங்கள், கனவுகள், அற்புதங்கள்.

அறிவியலில் உள்ளவர்கள் எப்போதுமே அற்புதங்கள், தேவதூதர்கள், வழிகாட்டும் கனவுகள், போன்றவற்றை நம்ப மாட்டார்கள். அறிவியலின்படி நிரூபிக்கப்படக் கூடியவைகளை மட்டுமே நம்புவார்கள். உனக்கு நடந்தது எனக்கும் நடந்தால் நம்புவேன் என்பார்கள்.

யூத மதத்திலும் பெரிய பதவிகளில் இருந்தவர்கள், பிரதான ஆசாரியர்களே கூட, தேவ தூதர்களையும், மரணத்துக்குப் பின்னான வாழ்வையும் நம்பாமல் இருந்திருக்கிறார்கள். நம் திருச்சபைகளிலும் இப்படி அறிவியலை வேதாகமத்தில் புகுத்தி, அற்புதங்கள் போன்றவற்றை இல்லை என்று சாதிக்கிறவர்கள் இருக்கிறார்கள். சிலர் ஸ்தோத்திரம் சொல்லி, விசுவாசி என்ற பட்டத்துடன் இருந்தாலும் மறைமுகமாக, தங்கள் வாழ்க்கையின் மூலம், கடவுள் இல்லை என்று நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இயேசுவின் பிறப்பு (கன்னியிடம் பிறந்ததுவே ஒரு அற்புதம்) , அதன் பின்னணியில் தேவ தூதர்கள், கனவுகள், வழிகாட்டும் நட்சத்திரம் என்று அற்புதங்கள் மற்றும் இயற்கைக்கு அப்பாற்பட்ட பல அம்சங்கள் இருக்கின்றன. இயேசுவின் வாழ்வு முழுவதுமே இவை இருந்தாலும், அவர் பிறப்பின் காலத்தைப் போல பின்னர் இல்லை.

சகரியாவுக்கு தூதனின் தரிசனம். ஆலயத்தின் மிக பரிசுத்தமான இடத்தில் போய் ஆராதனை செய்து, தூபம் போடும் சகரியாவுக்கு, அங்கேயே காட்சி தந்த தூதனை, தூதன் சொன்ன செய்தியை நம்ப முடியவில்லை. அவர் ஒரு சதுசேயனாக இருந்திருக்கலாம். அல்லது உருவமில்லாத இறைவனை மட்டுமே நம்பும் தீவிர யூதனுக்கு, காட்சி தரும் ஒரு தூதனை நம்ப மனம் இல்லாமல் இருந்திருக்கலாம். எப்படியோ நம்புகிறோமோ, இல்லையோ கர்த்தர் தான் செய்ய வேண்டியதைச் செய்வார். நம்பாதவர் வாய் பேச முடியாமல், அற்புதத்தைப் பற்றி பிறருக்கும் சொல்ல முடியாமல், வாய் விட்டு கர்த்தரைப் புகழவும் முடியாமல் இருந்திருக்கிறார். கர்த்தரின் அருகில் இருந்தும் அவர் கொடுக்கும் செய்தியை நம்பாமல் இருப்பது எப்படி இருக்கிறது? ஊழியக்காரனாக பிறருக்கு கர்த்தரைப் பற்றி, அவர் கொடுக்கும் செய்தியைக் கொடுக்கும் நான், எனக்குக் கர்த்தர் தரும் செய்தியை நம்புகிறேனா? அவர் செய்தியைத் தரும் இடத்தில் கேட்கும் நிலையில் இருக்கிறேனா?

அமைதிப்படுத்தி அவர் குரலைக் கேட்க ஒரு இடம் இருக்கட்டும். ஒரு நேரம் இருக்கட்டும். ஊழியத்தை விட ஊழியன் மேலானவன். ஊழியத்தைக் கொடுத்தவர் தான் ஊழியத்தை விட மேலானவர். இதோ வாய் பேசாத சகரியா நமக்கு ஒரு செய்தி கொடுக்கின்றார். நம்பு. ஏற்றுக் கொள், கீழ்ப்படி. 

இறுதியில் கீழ்ப்படிந்தார் சகரியா. மகனுக்கு யோவான் என்று பெயரிட வேண்டும் என்று எழுதிக் காட்டுகிறார், அவர் வாயும் திறந்தது. ஒரு பாடலைப் பாடுகிறார்.

அவரது பாடல் அவரது நம்பிக்கையைக் காட்டுகிறது. எதிர்பார்த்திருந்த ஒரு ஆன்மீக சூழ்நிலையைப் பற்றி சொல்கிறது. மேசியா வருவார் - அவர் தனக்கு உறவினர் என்று தெரிந்தால் எத்தனை மகிழ்ச்சியாக இருந்திருக்கும் சகரியாவுக்கு?
எலிசபெத் மரியாள் சந்திப்பும் இப்படித் தான், மகிழ்ச்சியாக, பாடல் பாடுவதிலும் ஒருவரை ஒருவர் வாழ்த்துவதிலும் முடிகிறது. 

தேவதூதர்கள் நமக்குப் பணிவிடை செய்கிறவர்கள் என்று வேதம் சொன்னாலும், தூதர்களை முக்கியப்படுத்தி, வணங்கிவிடக் கூடாது. நமக்குத் தெரியாத விஷயங்களில் அதிகம் தலையை விடக்கூடாது என்று கவனமாக இருக்க வேண்டும். தேவதூதர்கள் உதவி செய்கிறார்களா? செய்யட்டும். அதை ஆராய்ச்சி செய்வது சரியானதல்ல. தேவதூதர்கள் உதவி செய்வார்கள் என்று காத்திருக்கலாமா? அது மடத்தனம். நாம் உற்றுப் பார்க்க வேண்டியது இயேசுவைத் தான். ஏனென்றால் ஒளியின் தூதனாக நம்மிடம் சாத்தான் வர முடியும். ஆனால் இயேசுவாக அவனால் வர முடியாது. அந்திக்கிறிஸ்துவாகத் தான் அவன் வர முடியும். அதற்கான அடையாளங்களை இயேசு தெளிவாக முன்னறிவித்திருக்கிறார்.

தேவ தூதரின் காட்சிகள்:

சகரியா
மரியாள்
மேய்ப்பர்கள்

கனவு:

யோசேப்பு
சாஸ்திரிகள்

அற்புதங்கள்:

யோவானின் பிறப்பு - வயதானவர்களுக்கு ஒரு மகன்.


செய்திகள்:

மகனுக்கு யோவான் என்று பெயரிட வேண்டும்.
யோவானை எப்படி வளர்க்க வேண்டும். 
யோவான் செய்யப் போவது என்ன?

மரியாளை சேர்த்துக் கொள்
இயேசு என்று மகனுக்குப் பெயரிடு
இயேசு யார்?
இயேசு என்ன செய்யப் போகிறார்?
ஆபத்து - எகிப்துக்குப் போ
ஆபத்து - நாசரேத்தில் தங்கியிரு
ஆபத்து - வேறு வழியாகப் போங்கள்.




இன்று இதைப் போல வெளிப்படையாக நமக்கு செய்திகள் வந்தால் நன்றாக இருக்கும் இல்லையா?

ஆவியானவர் நமக்குள் இருக்கிறார்.
நம் மனசாட்சி உயிர்ப்பிக்கப்பட்டிருக்கிறது.
வேத வசனம் வழிகாட்டியாக இருக்கிறது.
உடன் விசுவாசிகள் உதவ இருக்கின்றார்கள்.
நம் அறிவையும் பயன்படுத்தும்படி கர்த்தர் விரும்புகிறார்.

இவற்றையும் மீறி, காட்சிகள், அற்புதங்கள், தேவதூதர்கள், நட்சத்திரம் என்று எதிர்பார்ப்பது சரியாகத் தெரியவில்லை.

அமைதியாகக் கர்த்தர் பேசுவதைக் கேட்கும் நேரம், மனசாட்சியின் குரலையும், கர்த்தரின் உணர்த்துதலையும், வேதாகமத்தின் வழிகாட்டுதலையும் இணைக்கும் போது கனவுகள், தேவதூதன், அற்புதங்களை விட மேலான ஒன்று நமக்குள் நடக்கும் - இயேசுவுடன் உறவு. இது தினமும் புதுப்பிக்கப்படும் போது…. ஸ்கைப், வாட்ஸ் அப், விடியோ கால், FB live, எல்லாமே தேவையில்லை, ஏனென்றால் நாம் நேருக்கு நேராகப் பேசிக் கொண்டிருக்கிறோம்.

இயேசுவிடம் நேரடியாகப் பேசும் நிலைக்கு வந்துவிட்டால், ஏஜண்ட்டுகள், கருவிகள், ஆப்புகள் எதுவும் தேவையில்லை, நீங்களும் இயேசுவும் போதும்.

நான் இன்று 30 நிமிடங்கள் அமைதியாக செலவிட்டேன். சில வழிகாட்டுதல்கள் கிடைத்திருக்கின்றன. அவற்றை இன்றே செய்யப் போகிறேன்.

இயேசுவுக்கான பெயர்கள்:

இயேசு - இரட்சகர்.
இம்மானுவேல் - கர்த்தர் நம்முடன் இருக்கிறார்.


இயேசுவின் பிறப்பு, நம் பொறுப்பு:


இயேசு பிறந்த போது பெத்லகேம் பகுதியில் பலர் குழந்தைகள் இறந்தன. இதற்கு இயேசு பதில் சொல்லித்தான் ஆகவேண்டும் என்றார் ஒரு மேதாவி. இன்று பெஷாவாரில், கும்பகோணத்தில், சுனாமியில் இறந்த குழந்தைகளுக்கும் அன்று பெத்லகேமில் இறந்த குழந்தைகளுக்கும் கர்த்தர் தான் பதில் சொல்ல வேண்டும் என்று இன்னொரு அதி புத்திசாலி சவால் விட்டார்.

இந்த உலகத்தில் மனிதனின் உள்ளத்தில் ஏற்பட்ட சுயநலமும், மனிதனின் கீழ்ப்படியாமையின் தண்டனையாகவும் தான் இந்த உலகத்தில் தீமை வந்தது. அந்த தீமையை அகற்ற வந்தவர் தான் இயேசு. அவர் ஒரு மனிதனாக வந்தாலும் கூட தீமையான உலகத்தின் பல இடர்களை சந்தித்தார்.

மனிதனின் கீழ்ப்படியாமை தான் பூமியின் மேல் கூட சாபத்தையும் அழிவுகளையும் கொண்டு வருகின்றது. ஏரோது போன்ற அதிகாரத்தில் தன்னலக்காரர்களின் மூலம் அழிவு ஏற்படுகிறது. சாபம் பெற்ற பூமியில் வியாதிகள், இயற்கை அழிவுகள் என்று மக்கள் சாகிறார்கள். இந்த நிலையில் கிறிஸ்தவ செய்தி என்பது ஒரு சின்ன சூத்திரத்துக்குள் அடங்குவது போலத் தெரிகின்றது.

ஜான் ஸ்டாட் விளக்கிய ஒரு கருத்தை நான் சிறிது அட்ஜஸ்ட் செய்து (“சோதனை” யும் அட்டவணையும் மட்டும் தான் நான் சேர்த்தது)

படைப்பு 
நல்லது
மனிதனின் கலகம் / வீழ்ச்சி
தீமை 
இயேசுவின் மீட்பு
புதுமை
சோதனைகள் 
தவிப்பு
இரண்டாம் வருகை / நித்தியம் 
முழுமை

எந்த கிறிஸ்தவ செய்தியும் இந்த கட்டங்களுக்குள் அடங்கிப் போய்விடும். வேதாகமம் முழுவதையும் இந்த கட்டங்களுக்குள் சுருக்கிவிடலாம். அப்படியானால் ஆன்மீகத்தில் புதிதாகத் தெரிந்து கொள்ள என்ன இருக்கிறது? விட்டுவிடலாமா?

நாம் எத்தனை தடவை சாப்பிட்டாலும் ஒவ்வொரு தடவை சாப்பிடுவதிலும் ஒரு சுவராசியம் இருக்கும் அல்லவா? அதே சாப்பாடு என்றாலும், சமைத்தவர்கள், உடன் சாப்பிடுபவர்கள், சாப்பிடும் இடம், சூழ்நிலை, மனநிலை, சாப்பாட்டின் சுவை, சாப்பாட்டின் உள்ளடக்கம் என்று ஒவ்வொரு சாப்பாடும் வித்தியாசமானதாக, தனித்தன்மை உள்ளதாக இருக்கிறது அல்லவா? இது போலத் தான், வேதாகமம், ஜெபம், ஊழியம், சக விசுவாசிகளுடன் ஐக்கியம் எல்லாமே பழையதாக இருந்தாலும் ஒரே டாப்பிக்காகத் தெரிந்தாலும் ஒவ்வொரு நாளும் இயேசுவுடன் நாம் வைக்கும் உறவு தான், தொடர்ந்து நமக்குப் புதுப்புது அனுபவங்களைக் கொடுக்கும். அது தான் நம் ஆன்மீக வாழ்வைப் புதுமையானதாக, சிறப்பானதாக வைத்திருக்கும்.

ஜான் ஸ்டாட் விளக்கிய ஒரு கருத்தை நான் சிறிது அட்ஜஸ்ட் செய்து (“சோதனை” யும் அட்டவணையும் மட்டும் தான் நான் சேர்த்தது)


எந்த கிறிஸ்தவ செய்தியும் இந்த கட்டங்களுக்குள் அடங்கிப் போய்விடும். வேதாகமம் முழுவதையும் இந்த கட்டங்களுக்குள் சுருக்கிவிடலாம். அப்படியானால் ஆன்மீகத்தில் புதிதாகத் தெரிந்து கொள்ள என்ன இருக்கிறது? விட்டுவிடலாமா?

நாம் எத்தனை தடவை சாப்பிட்டாலும் ஒவ்வொரு தடவை சாப்பிடுவதிலும் ஒரு சுவராசியம் இருக்கும் அல்லவா? அதே சாப்பாடு என்றாலும், சமைத்தவர்கள், உடன் சாப்பிடுபவர்கள், சாப்பிடும் இடம், சூழ்நிலை, மனநிலை, சாப்பாட்டின் சுவை, சாப்பாட்டின் உள்ளடக்கம் என்று ஒவ்வொரு சாப்பாடும் வித்தியாசமானதாக, தனித்தன்மை உள்ளதாக இருக்கிறது அல்லவா? இது போலத் தான், வேதாகமம், ஜெபம், ஊழியம், சக விசுவாசிகளுடன் ஐக்கியம் எல்லாமே பழையதாக இருந்தாலும் ஒரே டாப்பிக்காகத் தெரிந்தாலும் ஒவ்வொரு நாளும் இயேசுவுடன் நாம் வைக்கும் உறவு தான், தொடர்ந்து நமக்குப் புதுப்புது அனுபவங்களைக் கொடுக்கும். அது தான் நம் ஆன்மீக வாழ்வைப் புதுமையானதாக, சிறப்பானதாக வைத்திருக்கும்.
உண்மையிலேயே காதலிப்பவர்களைக் கேட்டுப் பாருங்கள் (அது திருமணத்துக்கு முன்பா பின்பா என்பதைப் பற்றி நான் பேசப் போவதில்லை. அது வேறு தலைப்பு. அந்தத் தலைப்பில் நான் பொது வெளியில் இப்போதைக்கு எழுதப் போவதில்லை). என் ஆதர்ச ராக் பாடகன் போனோ (U2) சொல்கிறான்: என் மனைவியை ஒவ்வொரு நாளும் புதிதாகக் கண்டு பிடிக்கிறேன் என்று. அவர் தன் பள்ளிக் காதலி (ஒரே காதலி)யைத் தான் இன்னும் மனைவியாகக் கொண்டிருக்கிறார். இந்தியாவின் அண்டை நாடு ஒன்றில், திருமணம் என்ற சொல்லுக்கே அர்த்தர் தெரியாத, யாரும் யாருடனும் எப்போதும் வாழலாம் என்று இருக்கும் கலாச்சாரத்தில் என் நண்பன் ஒருவன் ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழ்ந்து காட்டி, இளைய தலைமுறைக்கும் அதை அழகாகக் கற்றுக்  கொடுத்துக் கொண்டிருக்கிறார். அவர் என்னிடம் சொன்ன அருமையான வார்த்தைகள் இது தான். நான் தினமும் என் மனைவியில் புது அம்சத்தைக் கண்கிறேன் என்று. இதே கருத்தை ஆன்மீகத்துக்கும் பொருத்திப் பார்க்கலாம். எத்தனை தடவைகள் நீங்கள் வேதத்தை வாசித்திருந்தாலும், இயேசுவின் வாழ்க்கை, போதனை, செயல்கள் பற்றி கரைத்துக் குடித்திருந்தாலும், ஒவ்வொரு முறை அவரைப் பற்றி வேதத்தில் வாசிக்கும் போதும், தியானிக்கும் போதும் புது அனுபவம், இனிமையான உணர்வு கிடைக்கும், கிடைக்க வேண்டும். முயற்சிப்போம். தொடருவோம். 


No comments: