Saturday, September 8, 2012

September 9, ஒரே பலி

எபிரெயர் 10


பரிசுத்தமாக்கப்படுகிறவர்களை ஒரே பலியினாலே இவர் என்றென்றைக்கும் பூரணப்படுத்தியிருக்கிறார். - எபிரெயர் 10: 14


வியட்நாமில் அமெரிக்க வீரர்கள் போரிட்டபோது ஒரு இளம் தளபதி தனது வீரர்களைப் பத்திரமாகப் பார்த்துக் கொண்டார். ஒரு நாளில் ஒரு வீரன் மட்டும் காயப்பட்டு அருகில் முனகிக் கொண்டிருக்கும் போது தளபதியும் வீரர்களும் பதுங்கு குழியில் பாதுகாப்பாக இருந்து கொண்டிருந்தனர். அவர்கள் பதுங்கு குழியை விட்டு வெளியே வந்தால் உயிருக்குப் பாதுகாப்பு இல்லை என்பது அனைவருக்குமே தெரியும். இரவு முழுவதும் காயப்பட்ட வீரனின் முனகல் கேட்டுக் கொண்டே இருந்தது. தளபதி அதற்கு மேலும் பொறுக்க முடியாதவராகத் தவழ்ந்து சென்று அந்த வீரனை இழுத்து வந்தார். காயப்பட்ட வீரனைப் பதுங்கு குழிக்குள் பாதுகாப்பாகத் தள்ளி விடவும் தளபதியின் முதுகில் ஒரு குண்டு பாய்ந்தது அவர் உடனேயே இறந்து போனார்.

சில காலத்துக்குப் பின் காப்பாற்றப்பட்ட வீரன் தாய்நாட்டுக்குத் திரும்பினான். இறந்து போன தளபதியின் பெற்றோர் தன் மகனால் காப்பாற்றப்பட்ட வீரனைக் காணவேண்டும் என்று ஆவலாகக் காத்திருந்தார்கள். ஆனால் அவனோ அவர்களிடம் போனபோது குடி போதையில் இருந்தான். மேலும் அசிங்கமான நகைச்சுவை அவன் பேச்சில் இருந்தது. இறந்து போன தளபதிக்கு எந்த வகையிலும் மரியாதை கொடுப்பதாக அவன் பேச்சுக்கள் இல்லை. இறந்து போன வீரனின் பெற்றோரோ தனது மகனின் முயற்சியும் தியாகமும் சரியான வகையில் பயன்படுத்தப்படவில்லையோ என்று வருத்தப்பட்டார்கள்.

ஆனால் இயேசுவின் தியாக பலியை ஏற்றுக் கொள்கிறவர்கள் அவரது பலியால் பரிசுத்தமாக்கப்படுகிறோம். மேலும் அவரது பலியானது நம்மைப் பூரணப்படுத்துகின்றது.


சிந்தனை : இயேசுவின் தியாக பலிக்கு நாம் தகுதியற்றவர்கள் என்றாலும் அந்தப் பலியே நம்மைத் தகுதிப்படுத்துகின்றது.


ஜெபம் : கர்த்தாவே உமது பலியினால் நான் பரிசுத்தமாக்கப்படவும், தொடர்ந்து காக்கப்படவும் எனக்கு ஒத்தாசை செய்யும். ஆமென்.


For Audio Tracks visit : DD-Tamil

For Older Posts visit : http://dropindeocean.blogspot.com/
--
http://micyell.com
micyellmedia@gmail.com
Mobile : 09994258788

No comments: