Thursday, September 6, 2012

September 7, சடங்குகள்

எபிரெயர் 9:1-10


இவைகள் சீர்திருந்தல் உண்டாகும் காலம்வரைக்கும் நடந்தேறும்படி கட்டளையிடப்பட்ட போஜனபானங்களும், பலவித ஸ்நானங்களும், சரீரத்திற்கேற்ற சடங்குகளுமேயல்லாமல் வேறல்ல. - எபிரெயர் 9: 10

பாரம்பரிய கிறிஸ்தவர் ஒருவரின் வீட்டில் புதிதாக வேலைக்காரன் ஒருவன் சேர்ந்தான். அவனுக்கு ஞானஸ்நானம் கொடுத்து புதிய கிறிஸ்தவப் பெயரும் கொடுத்துவிட்டார்கள். அவனுக்கு எதுவும் புரியவில்லை என்றாலும் நன்றாக வேலை செய்துவந்தான். லெந்துகாலத்தில் காய்கறிகளை மட்டும் தான் சமைக்க வேண்டும் என்று சொன்னது அவனுக்குப் பிரியமாக இல்லை. எஜமான் கத்தரிக்காய் குழம்பு மீனைப் போன்ற வாசனையைக் கொடுக்கிறதே என்று சந்தேகப்பட்டுக் கேட்டபோது ஐயா மீனுக்கு கத்தரிக்காய்ன்னு ஞானஸ்நானம் குடுத்துட்டேன் என்றான் வேலைக்காரன்.

பழைய ஏற்பாட்டின் காலத்தில் கொடுக்கப்பட்ட சட்டங்கள், சடங்குகள் யாவுமே உடலுக்கு ஏற்றவைகளாகவே கொடுக்கப்பட்டன. அவைகள் பின்பதாக வரவிருந்த இயேசுவின் முன் அடையாளங்களாக இருந்தன. ஆனால் இயேசு வந்த பின் பழைய சடங்குகளுக்குத் தேவையில்லாமல் போய்விட்டன. இப்போது எந்தவிதமான ஆன்மீகச் சடங்குகள் இருந்தாலும் அவைகள் இயேசுவை சுட்டிக் காட்டுபவைகளாகவே இருக்கின்றன.

புதிய ஏற்பாட்டின் காலத்தில் சரீரத்துக்கேற்ற சடங்குகளைவிட ஆத்துமாவுக்கேற்ற அடையாளங்களே அதிகமாக இருக்கின்றன. உதாரணமாக ஞானஸ்நானம் என்பது உடலின் அழுக்கைக் கழுவுவதல்ல. அது மனது புதிதாகி மறுபிறப்படைவதையே குறிக்கின்றது. ஆன்மீகத்தின் அடையாளங்களையும் அவற்றின் அர்த்தங்களையும் புரிந்து கொள்வது வீண் சடங்குகள் மற்றும் பாரம்பரியங்களிலிருந்து நம்மைப் பாதுகாக்கும்.


சிந்தனை : ஆவியோடும் உண்மையோடும் ஆராதித்தல் என்பது ஆன்மாவில் செய்யப்படும் தொழுகையைக் குறிக்கின்றது.


ஜெபம் : கர்த்தாவே உம்மை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ள என் ஆன்மாவைப் புதுப்பித்து, உணர்வுள்ளதாக்கும். ஆமென்.


For Audio Tracks visit : DD-Tamil

For Older Posts visit : http://dropindeocean.blogspot.com/
--
http://micyell.com
micyellmedia@gmail.com
Mobile : 09994258788

No comments: