எபிரெயர் 7
தம்மைத்தாமே பலியிட்டதினாலே ஒரேதரம் செய்து முடித்தார். - எபிரெயர் 7:27
ஜோதிராவ் ஃபூலே என்னும் மகராஷ்ட்டிரத் தலைவர் தாழ்த்தப்பட்ட மக்களுக்கென்று மிகப்பெரும் சேவைகளைச் செய்ததால் அவருக்கு மகாத்மா என்ற பெயரைக் கொடுத்தார்கள். காந்திக்கு முன்பு மகாத்மா என்ற பட்டத்தைப் பெற்றவர் அவர் தான். அவர் கிறிஸ்தவ மிஷனரிகளின் உதவியால் இயேசுவைப் பற்றி அறிந்திருக்கக் கூடும் என்று சொல்கிறார்கள். ஏனென்றால் அவர் கடவுள் என்று வழிபட்டுப் பிறருக்கும் போதித்த கடவுளின் பெயர் பலிராஜா என்பதாகும். மனிதர்களுக்காகப் பலியான ராஜாவாகிய இயேசு தான் மகாத்மா ஃபூலே சொன்ன அதே பலிராஜா என்று இப்போதைய கிறிஸ்தவர்கள் மகாராஷ்ட்டிர மக்களுக்குப் பிரசங்கித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இயேசு பலியானார் என்றால் யாருக்கு அவர் பலியானார் என்ற கேள்வி நமக்கு எழுவது இயல்பாகும். * சாத்தானுக்கா? சாத்தான் கடவுளால் படைக்கப்பட்ட ஒரு தூதன் தான் ஆகவே சாத்தான் பெரியவன் அல்ல. அவனுக்கு இயேசு தன்னைப் பலியாக்கியிருக்க வேண்டிய அவசியம் இல்லை. * பிதாவுக்கா? பிதாவானவர் கொடூரமானவரா என்ற கேள்வி வருகின்றது. மேலும் இயேசுவும் பிதாவும் ஒன்றாக இருக்கிறார்களே? * பரிசுத்த ஆவிக்கா? இயேசு பரலோகத்துக்குப் போன பின்பு தான் பரிசுத்த ஆவியானவர் உலகத்துக்கு வந்தார். மேலும் பரிசுத்த ஆவியானவரும் பிதாவோடும் இயேசுவோடும் இணையாகக் கடவுளாக இருப்பவர். * மனிதனுக்கா? - மனிதன் மனிதன் தான். மனிதன் கடவுளால் படைக்கப்பட்ட சிருஷ்ட்டி தான். * தம்மைத் தாமே பலியாக்கினார் என்றே வேதம் சொல்கிறது. ஆபிரகாமுக்கு தேவன் வாக்குத்தத்தம்பண்ணினபோது, ஆணையிடும்படி தம்மிலும் பெரியவர் ஒருவருமில்லாதபடியினாலே தமது பேரிலே தானே ஆணையிட்டார் (எபிரெயர் 6:13) என்றது போல தம்மிலும் பெரியவர் ஒருவரும் இல்லாதபடியால் இயேசுவே பெரியவராக இருப்பதால் தம்மைத் தாமே பலியிட்டார்.
சிந்தனை : பலியாக வந்தவர் நம்மையே ஜீவ பலியாகக் கேட்கிறார். ஆயத்தமா?
ஜெபம் : இயேசுவே, நீர் எனக்காகப் பலியானதால் நான் பரிசுத்தமானேன். நான் என்னை உமக்கே பலியாகத் தினமும் படைக்கிறேன். ஆமென்.
For Audio Tracks visit : DD-Tamil
micyellmedia@gmail.com
Mobile : 09994258788
No comments:
Post a Comment