எபிரெயர் 8
அந்த முதலாம் உடன்படிக்கை பிழைத்திருந்ததானால், இரண்டாம் உடன்படிக்கைக்கு இடம் தேடவேண்டுவதில்லையே. - எபிரெயர் 8:7
சமீபத்தில் ராணுவ வீரர்களுக்கான சம்பளம் பற்றிய மாற்றம் ஒன்று அறிவிக்கப்பட்டது. முற்காலத்தில் ராணுவ வீரர்களின் சம்பளமானது மாதத்துவக்கத்திலேயே அவர்களுக்கு முன்பணமாகக் கொடுக்கப்பட்டு வந்தது. ஒவ்வொரு வீரருக்கும் ஒவ்வொரு கணக்குப் புத்தகம் இருக்கும். அதில் அவர்கள் தங்கள் குடும்பத்துக்கு அனுப்பச் சொல்கிற பணம் அனுப்பி வைக்கப்பட்டு பின்னர் கணக்கின்படி மீதமுள்ள பணம் அவர்களிடம் கொடுக்கப்படும். இப்போது அந்த வழக்கம் மாறி மற்றவர்களைப் போல ராணுவ வீரர்களுக்கும் மாதக்கடைசியில் சம்பளம் கொடுக்கப்படுகின்றது. நாட்டின் சட்டங்களும் நிறுவனங்களின் சட்டங்களும் காலங்கள் மாறும்போது புதியவைகளாக மாற்றப்படுகின்றன. திருத்தங்கள் செய்யப்படுகின்றன. அதைப் போலவே ஆன்மீகத்திலும் சில மாற்றங்கள் ஏற்படுவது வழக்கம் தான்.ஆனால் மாறாத கடவுள் மாறும் மனிதர்களுக்காக சில மாற்றங்களைக் கொண்டு வந்தார். உதாரணமாக பழைய ஏற்பாட்டின் காலத்தில் இருந்த பலிகள் உடன்படிக்கைகள் ஆராதனை முறைமைகள் யாவும் முதலாம் உடன்படிக்கை என்று அழைக்கப்படுகின்றன. இயேசு தாமே பலியாகவும், பிரதான ஆசாரியனாகவும் தம்மைத் தாமே பலியிட்டதால் இரண்டாம் உடன்படிக்கையைச் செய்தார். இதில் முதல் உடன்படிக்கை பிழைக்கவில்லை என்கிறார். அதாவது முதலாம் உடன்படிக்கை குறைகள் உள்ளதாக இருந்தது. ஆனால் இயேசுவின் உடன்படிக்கையோ குறையில்லாததுவும் உயிருள்ளதாகவும் இருந்து மக்களுக்கு பூரணமான வாழ்வைத் தந்து கொண்டிருக்கின்றது.
ஆன்மீக வாழ்வில் கடவுள் நம்முடன் உடன்படிக்கை செய்திருக்கிறார் என்னும் உண்மை நமக்குப் பொறுப்பு உணர்வையும், மகிழ்ச்சியையும் தரவேண்டும்.
சிந்தனை : தான் படைத்த மனிதனுடன் உடன்படிக்கை செய்யும் அளவுக்கு மனிதர் மேல் கடவுள் அன்பு வைத்தார். நம்மை உயர்த்தினார்.
ஜெபம் : கர்த்தாவே என்னுடன் நீர் செய்த உடன்படிக்கைக்காக உமக்கு நன்றி. என் பங்கில் உடன்படிக்கையை நிறைவேற்ற உதவும். ஆமென்.
For Audio Tracks visit : DD-Tamil
micyellmedia@gmail.com
Mobile : 09994258788
No comments:
Post a Comment