Friday, September 7, 2012

September 8, இரத்தம்

எபிரெயர் 9:11-28


நியாயப்பிரமாணத்தின்படி கொஞ்சங்குறைய எல்லாம் இரத்தத்தினாலே சுத்திகரிக்கப்படும்; இரத்தஞ்சிந்துதலில்லாமல் மன்னிப்பு உண்டாகாது. - எபிரெயர் 9:22


ஒரு பீட்சாவை சாப்பிட இருபத்து மூன்று வினாடிகள் ஆகின்றதாம். மூன்று அல்லது நான்கு வாக்கியங்களைச் சொல்வதற்கும் அவ்வளவு நேரம் தான் ஆகின்றது. ஆனால் இதே நேரத்தில் உங்கள் உடலில் அற்புதமான ஒன்று நடக்கின்றது. இரத்தமானது நம் உடலில் முழுவதுமாக ஓடி, உடலின் செல்களுக்கு ஆக்சிஜனையும் சத்துக்களையும் கொடுத்துவிடுகின்றது. அப்படியே கழிவுகளையும் செல்களிலிருந்து அகற்றிவிடுகின்றது. மீண்டும் இதே பணி தொடருகின்றது. இவை அனைத்தும் 23 வினாடிகளுக்குள் நடந்து முடிந்துவிடுகின்றன. இரத்தம் இவ்வாறாக உயிரை உடல் முழுவதும் கொண்டு செல்கிறது. அழுக்குகளை நீக்கி உயிர் வாழ்வதற்கான வாய்ப்புக்களை அதிகரித்துக் கொடுக்கின்றது.

இரத்தமானது உயிரைத் தருகிறது, ஊட்டத்தைத் தருகின்றது, சுத்திகரிக்கின்றது. இது ஆன்மீகத்திற்கும் பொருந்தக்கூடியதாகும். மிருகங்களின் இரத்தமானது மனிதர்களின் பாவங்களைப் போக்குவதாகப் பழைய ஏற்பாட்டின் காலத்தில் ஒரு அடையாளமாகக் கொடுக்கப்பட்டதால், மக்கள் வழக்கமாக மிருகங்களைப் பலியாகக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் இயேசு தனது இரத்தத்தைச் சிந்தி பலியானதன் மூலம் நமது பாவங்கள் மன்னிக்கப்பட்டு நாம் சுத்திகரிக்கப்படுகிறோம். நம் ஆன்மாவுக்கு உயிரைத்தரும் உயிர்க்காற்றும் சத்துக்களும், ஆன்மாவின் அழுக்குகளைச் சுத்திகரிக்கும் செயலும் இயேசுவின் இரத்தத்தால் நமக்குக் கிடைக்கின்றன.

நாம் நமது வாழ்வில் இயேசுவை அவரது சிலுவை மரணத்தை விசுவாசத்தால் ஏற்றுக் கொள்ளும் போது இந்த உயிர் தரும் செயலும் சுத்திகரிக்கும் செயலும் நடைபெறும்.


சிந்தனை : இரத்த தானம் என்பது உடலுக்கு, இயேசு செய்த சிலுவை இரத்த தானம் நமது ஆன்மாவுக்கு.


ஜெபம் : இயேசுவே உமது இரத்தத்தின் மகிமையை உணர்ந்து பரிசுத்தமாக வாழ எனக்கு அனுக்கிரகம் செய்யும். ஆமென்.


For Audio Tracks visit : DD-Tamil

For Older Posts visit : http://dropindeocean.blogspot.com/
--
http://micyell.com
micyellmedia@gmail.com
Mobile : 09994258788

No comments: