சங்கீதம் 144
இவ்விதமான சீரைப்பெற்றஜனம் பாக்கியமுள்ளது; கர்த்தரைத் தெய்வமாகக் கொண்டிருக்கிற ஜனம் பாக்கியமுள்ளது. - சங்கீதம் 144:15
வேதாகமத்தில் பலவிதமான பாக்கியங்களைப் பற்றிப் படிக்கிறோம். இதோ யார் பாக்கியவான் என்னும் ஒரு சிறிய பட்டியல்:
நம் தலையிலுள்ள முடிகள் எல்லாவும் எண்ணப்பட்டிருக்கின்றது (மத்தேயு 10:30) / நம் கண்ணீர் யாவும் அவர் துருத்தியில் இருக்கின்றது (சங்கீதம் 56:8) நமது ஜெபங்கள் யாவும் தங்கக் குடுவையில் இருக்கின்றன (வெளிப்படுத்தல் 5:8) / நமது செயல்கள் யாவும் ஞாபக புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கின்றன (மல்கியா 3:16) / நமது பெயர்கள் பரலோகத்தில் எழுதப்பட்டிருக்கின்றது (லூக்கா 10:20) / அவரது பரிசுத்தவான்கள் யாவரும் அவரது கரத்தில் இருக்கிறார்கள் (உபாகமம் 33:3) / கர்த்தரைத் தெய்வமாகக் கொண்டிருக்கிற ஜனம் பாக்கியமுள்ளது._சங்கீதம் 144:15).
என் கைகளைப் போருக்கும் என் விரல்களை யுத்தத்திற்கும் பழக்குவிக்கிறவர் என்று தனது சொந்த வாழ்க்கையில் கடவுள் தனக்குச் செய்த நன்மைகளையும், அவர் அனுபவித்த பாக்கியங்களையும் வரிசையாகச் சொல்கிறார் தாவீது. பின்னர் இதே சங்கீதத்தில், எங்கள் குமாரர்கள் ஓங்கி வளருகிற மரங்களைப் போலவும், எங்கள் குமாரத்திகள் அரண்மனை மூலைக்கற்களைப் போலவும் இருப்பார்கள், எங்கள் களஞ்சியங்கள் எல்லாவித தானியங்களாலும் நிறைந்திருக்கும், ஆடுகள் பலுகும், எருதுகள் பலத்தவைகளாக இருக்கும், எதிரிகள் எங்களுக்குள் புகுந்து பிரச்சனை செய்ய மாட்டார்கள், நாங்கள் அகதிகளாக வெளியே போகமாட்டோம், எங்கள் வீதிகளில் வன்முறை இருக்காது, சமாதானமாக வாழுவோம் என்றெல்லாம் இஸ்ரவேல் மக்களுக்கு ஆண்டவர் செய்த, செய்யப் போகின்ற பல நன்மைகளையும் பட்டியலிடுகிறார். அதன் பின்னர் இப்படிப்பட்ட நன்மைகளைப் பெற்றவர்கள் பாக்கியவான்கள் என்று சொல்கிறார். ஒரு மனிதனுக்கு அல்லது மக்கள் கூட்டத்துக்குக் கிடைக்கும். இவைகளுக்கெல்லாம் காரணம் கர்த்தர் தங்களது தெய்வமாக இருப்பது தான் என்கிறார் தாவீது.
சிந்தனை : எல்லா பாக்கியங்களுக்கும் மேலானது, கடவுளை நமது ஆண்டவராகக் கொண்டிருப்பது தான்.
ஜெபம் : ஆண்டவரே எத்தனை பாக்கியங்கள் எங்களுக்கு இருந்தாலும் உம் உறவு இல்லாமல் அவைகள் சாபங்களாகவே போகும் என்பதை உணர உம்மில் நான் மகிழ்ச்சியடைய உதவி செய்யும். ஆமென்.
For Audio Tracks visit : DD-Tamil
No comments:
Post a Comment