நீதிமொழிகள் 4
எல்லாக் காவலோடும் உன் இருதயத்தைக் காத்துக்கொள், அதினிடத்தினின்று ஜீவஊற்று புறப்படும். - நீதிமொழிகள் 4:23
வில்லியம் சந்திரன் என்னும் இலங்கையைச் சேர்ந்த கணக்காளர், கிறிஸ்துவுக்கு வாலிபர் ஊழியங்களில் ஈடுபட்டு உழைத்தவர். அவரது சகோதரன் சூரி வில்லியம்ஸ்-இன் புதிதாகத் துவங்கிய ஆன்மீக வாழ்வு வில்லியத்தையும் பிடித்துக் கொண்டது. தனது மாறிய வாழ்க்கையைப் பற்றி சந்திரன் இவ்வாறு சொல்கிறார்: “மனந்திரும்பிய பின் என் வாழ்க்கையில் நான் கண்ட முக்கியமான மாற்றங்களில் ஒன்று படிப்பில் எனக்குக் கிடைத்த முன்னேற்றம். ஒரு நாளுக்கு 90 நிமிடங்கள் மட்டுமே என் மனதில் பதிந்த பாடங்கள், ஒரு நாளுக்கு 6 மணி நேரம் என உயர்ந்தது. மனம் சுத்தமானது. ஆபாசமான சிந்தனைகள் விலகின. என்னால் படிப்பில் அதிக கவனம் செலுத்த முடிந்தது.” இங்கிலாந்தின் பட்டயக்கணக்கர் தேர்வில் மிகக்குறைந்த வயதிலேயே தேர்ச்சி பெற்ற மாணவன் என்ற சாதனையைப் படைத்தார்.
படிப்பில் கவனம் இல்லை என்று சொல்வதைவிட மனதில் தேவையில்லாதவைகள் இருக்கின்றன என்று சொல்லிப்பாருங்கள். சுத்தமாக்க கடவுளின் உதவியை நாடுங்கள். உங்கள் பங்குக்கு கடினமாக முயற்சி செய்யுங்கள்.
நமது உள்ளமும் பாழுங்கிணறைப் போல இல்லாமல் ஊற்று சுரக்கிற கிணறு போல இருக்க வேண்டுமானால், நமக்குள் இருக்கின்ற தீய சிந்தனைகள், கெட்ட பழக்க வழக்கங்கள், பழி வாங்கும் எண்ணங்கள், கசப்பு மற்றும் வெறுப்புகள் ஆகியவற்றை அகற்றி, மீண்டும் அப்படிப்பட்டவைகள் உள்ளே வராதபடி வலைகள் போட்டு காவல் காத்துக் கொண்டால், உங்கள் வாழ்க்கை பிறருக்கு பயனுள்ளதாக இருக்கும். கடவுளுக்கும் மகிமையைக் கொண்டு வருகிறதாக இருக்கும்.
சிந்தனை : இரைக்கிற ஊற்று சுரக்கும். ஆனால் சுத்தமான ஊற்றே பயன்படும்.
ஜெபம் : கடவுளே, என் வாழ்க்கை சுத்தமானதாக, பிறருக்கு பயனுள்ளதாக இருக்க என்னை சுத்தப்படுத்தி, சுத்தமாகவே இருக்க காவலாக உமது வேதத்தையும் ஆவியானவரையும் எனது மனசாட்சிக்கு துணையாக வைத்தருளும். ஆமென்.
For Audio Tracks visit : DD-Tamil
No comments:
Post a Comment