Sunday, March 18, 2012

March 19, டூயட்

நீதிமொழிகள் 5


உன் ஊற்றுக்கண் ஆசீர்வதிக்கப்படுவதாக; உன் இளவயதின் மனைவியோடே மகிழ்ந்திரு. - நீதிமொழிகள் 5:18

இள வயதில் மட்டுமல்ல, இளவயதில் மனைவியாக இருந்தவளே முதிர்வயதிலும் மனைவியாகத் தொடர்ந்து மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும் என்று இந்த வசனத்திற்கு அர்த்தம் கொள்ளலாம். இந்தக் காலத்தில் பல குடும்பங்கள், தம்பதிகள் பிரிந்து போவது அடிக்கடி நடக்கும் சம்பவமாகிறது. கிறிஸ்தவர்களும் இதற்கு விதிவிலக்கு அல்ல.

ஒரு காலத்தில் விவாகரத்து என்பது மேலைநாட்டவர்களும், நடிகைகளும் செய்யும் விஷயம் என்று நினைத்திருந்தோம். ஆனால் நன்றாக சிந்தித்துப் பார்த்தால் உங்களுக்குத் தெரிந்த நண்பர்கள் அல்லது உறவினர்களே கூட இந்தப் பிரச்சனையில் இருப்பது புரியும்.

வேலை, பணம் சம்பாதித்தல் போன்ற பல பரபரப்புகளுக்கு நடுவே சொந்த கணவன் மனைவி ஆகியோர் மகிழ்ச்சியாக இருக்கும் நேரங்கள் குறைந்து வருகின்றன. நேரத்தை கவனமாக பயன்படுத்த அறிந்திருக்கும் நாம் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருப்பது நேரத்தை வீணாக்குவது என்று நினைக்கிறோம். ஆனால் உறவுகள் என்பது விலை கொடுத்து வாங்கப்பட வேண்டியவைகள் அல்ல. பொறுமையாக செடியை வளர்த்து மரமாக்குவது போன்றதாகும். எனவே, திருமண வாழ்வில் நுழைந்திருப்பவர்களானாலும், நுழையக் காத்திருப்பவர்களானாலும், உங்கள் வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட திட்டமிடுங்கள். குழந்தைகளும் உங்கள் பெற்றோர் மகிழ்ச்சியாக இருக்கும் நேரங்களைக் கண்டுபிடிக்க உதவியாக இருங்கள். அவர்களை உற்சாகப்படுத்துங்கள்.


சிந்தனை : பிறருக்காக பல மணி நேரங்கள் உழைக்கும் நாம் நமக்காகவே இருக்கும் வாழ்க்கைத் துணைக்கு எவ்வளவு நேரம் ஒதுக்குகிறோம்?


ஜெபம் : அன்பின் கடவுளே, குடும்பம் என்ற அமைப்பை உருவாக்கிய நீர் அன்பை எங்கள் குடும்பத்தில் ஊற்றும். எங்கள் தம்பதிகள் மகிழ்ச்சியுடன் வாழ அருள் செய்யும், ஆமென்.


For Audio Tracks visit : DD-Tamil

For Older Posts visit : http://dropindeocean.blogspot.com/
--
http://micyell.com
micyellmedia@gmail.com
Mobile : 09994258788

No comments: