Friday, March 23, 2012

March 23, திருட்டுத் தண்ணீர்

நீதிமொழிகள் 9


மதியீனனை நோக்கி: திருட்டுத்தண்ணீர் தித்திக்கும், அந்தரங்கத்தில் புசிக்கும் அப்பம் இன்பமாயிருக்கும் என்றும் சொல்லிக் கூப்பிடுகிறாள்.

- நீதிமொழிகள் 9:17


ஒரு ஐஸ் க்ரீம் அல்லது கடலை மிட்டாயை சாப்பிடுவதற்கு நீங்கள் ஒளிந்து கொள்ள வேண்டியதில்லை. ஆனால் சிகரெட் பிடிப்பது போன்ற தவறான செயல்களைச் செய்பவர்கள் பொதுவான இடத்தில் வருவதில்லை. வாலிப வயதில் பிறருக்குத் தெரியாமல் இரகசியமாகச் செய்யும் தவறான செயல்களே அதிக இன்பத்தைத் தருவதாகத் தோன்றலாம். ஆனால் அவற்றின் இன்பங்களும், சுவையும் சிறிது காலத்தில் வேதனைகளாகவும், பயங்களாகவும் மாறிவிடும். விளையாட்டாகத் துவங்கிய பழக்கங்கள் உயிருக்கே ஆபத்தைத் தருவதாக மாறிவிடும்.

களவும் கற்று மற என்பது இந்தக் காலத்து தத்துவமாக இருக்கின்றது. ஆனால் மறக்கமுடியாத களவுகளாலும், கற்றுத் தேறிய களவுகளாலும் இன்றைய தலைமுறை தடுமாறிக்கொண்டிருக்கின்றது. அனைத்து தீய பழக்கங்களையும் கற்றுக் கொள்வதற்கும் தேறுவதற்கும் இன்டர்நெட், மொபைல் ஃபோன் மற்றும் பல ஊடகங்கள் உதவுகின்றன. பெரியவர்களோ அதிகாரிகளோ காவல்காத்துக் கொண்டே எல்லா நேரமும் இருக்க முடியாது. ஆகவே ஞானமாக இருக்க விரும்புகிறவர்கள், வெளிப்படையாகவும், உண்மையாகவும் இருக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். பிறருக்குத் தெரியாமல் இரகசியாமகச் செய்ய விரும்புகிறவைகள் இன்பமாகத் தோன்றினாலும் பிற்காலத்தில் குற்ற உணர்ச்சியையும், துரோகம் செய்துவிட்ட சிந்தனையையும் தான் அதிகம் தரும். எனவே தான் துணிகரமான பாவங்களுக்கும், மறைவான குற்றங்களுக்கும் என்னை நீங்கலாக்கிவிடும் என்ற ஜெபம் வேதாகமத்தில் நமக்கென்று வைக்கப்பட்டிருக்கின்றது.

சிந்தனை : திருட்டுத்தண்ணீரும், அந்தரங்க அப்பமும் தித்திப்பாகவும் இன்பமாகவும் இருக்கலாம் ஆனால் எப்போதுமே நம்மைப் பட்டினியாக வைத்துவிடும்.


ஜெபம் : பரிசுத்தமானவரே, வெளிப்படையாகவும் உண்மையாகவும் மட்டுமே அனுபவிக்கக் கூடியவைகளுக்காகக் காத்திருக்க உதவி செய்யும். ஆமென்.



For Audio Tracks visit : DD-Tamil

For Older Posts visit : http://dropindeocean.blogspot.com/
--
http://micyell.com
micyellmedia@gmail.com
Mobile : 09994258788

No comments: