நீதிமொழிகள் 2
நல்யோசனை உன்னைக் காப்பாற்றும், புத்தி உன்னைப் பாதுகாக்கும். - நீதிமொழிகள் 2:11
தற்காலக் கார் ஒன்றில் பெட்ரோல் குறைகிறது என்ற அறிவிப்பை ஒரு பெண்ணின் குரலில் பதிவு செய்து வைத்திருந்தார்கள். காரில் அந்தக் குரல் அடிக்கடி தொந்தரவு செய்ததாக நினைத்த ஒருவர் அந்தக் குரலுக்குக் காரணமான மின்சார வயரை அறுத்துவிட்டார். ஆனால் அவர் நடுக்காட்டில் போய்க்கொண்டிருந்தபோது காரில் பெட்ரோல் இல்லாமல் திண்டாடியபோது தான் அந்த அறிவிப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொண்டார். அந்தக் குரல் இருந்திருந்து அறிவித்திருந்தால் பெட்ரோல் தீர்ந்து போவதற்கு முன்பே அதை நிரப்பி தடையில்லாமல் பயணத்தைத் தொடர்ந்திருக்கலாமே என்று நினைத்தார்.
பிறரது யோசனைகள் நமக்கு முக்கியமானவைகள். ஏனென்றால் நாம் சந்திக்காத பல சூழ்நிலைகளை அவர்கள் சந்தித்து, கஷ்ட்டப்பட்டு பாடத்தைக் கற்றிருப்பார்கள் அவர்கள். நாமும் அதே சூழ்நிலைக்குத் திரும்பவும் போய் கஷ்ட்டப்பட வேண்டிய அவசியம் இல்லை. அதைப் போலவே அவர்களது வெற்றியின் இரகசியங்களும் பல காலமாகப் பொறுமையாக அவர்கள் கற்றுக் கொண்டவைகளாக இருக்கும். இவற்றை எளிதாக அவர்கள் சொல்லும் விதிகள் அல்லது கருத்துக்கள் மூலமாக நாம் கற்றுக் கொள்ளலாம். இப்படிப்பட்ட நல்ல யோசனைகள் தோல்வியிலிருந்து நஷ்ட்டங்களில் இருந்து நம்மைக் காப்பாற்றும்.
புத்தி என்பது நமக்குக் கடவுள் தந்திருக்கும் அறிவை உபயோகித்தல் ஆகும். ஒரு விஷயத்தைப் பற்றிய நன்மை-தீமைகள், லாப நஷ்ட்டங்கள் ஆகியவற்றை நாம் கணக்கிட்டுப் பார்க்கும் போது நாம் அவசர முடிவுகள் மற்றும் அதனால் வரும் மோசமான விளைவுகளுக்குத் தப்பிக்க முடியும்.
சிந்தனை : ஆலோசனையைத் தள்ளுகிறவர்கள் எச்சரிக்கையையும், பரிதபிக்கிறதையும் தான் கேட்பார்கள்.
ஜெபம் : ஆண்டவரே, பிறரது யோசனைகளைக் கேட்குமளவு தாழ்மையையும், எனது புத்தியை உபயோகிக்கும் அளவுக்கு ஞானத்தையும் தாரும். இவற்றில் நல்லவைகளைப் பின்பற்ற உம் ஆவியானவரின் உதவியைத் தாரும். ஆமென்.
For Audio Tracks visit : DD-Tamil
No comments:
Post a Comment