Sunday, March 25, 2012

March 26, பொய் உதடு

நீதிமொழிகள் 12


பொய் உதடுகள் கர்த்தருக்கு அருவருப்பானவைகள்; உண்மையாய் நடக்கிறவர்களோ அவருக்குப் பிரியம். - நீதிமொழிகள் 12:22


ஒரு கிரிக்கெட் வீரரை பேட்டி எடுக்கும் போது, ”நான் நூறு மீட்டர் தூரத்தை 9 வினாடிகளில் கடந்து போய்விடுவேன். 1 மீட்டர் தூரத்தில் வரும் பந்தை குதித்துப் பிடிப்பேன். என்னைத் தாண்டி ஒரு பந்தும் போக முடியாது. நான் அவுட் ஆனதாக சரித்திரமே கிடையாது. எல்லாப் பந்துக்களையும் பவுண்டரிக்கு அடித்துவிடுவேன்.” என்றார். “விளையாட்டில் அதிகம் கவனம் செலுத்தியதால் நீங்கள் படிப்பில் பரவாயில்லாமல் தான் இருந்திருப்பீர்கள் அல்லவா?” “நான் தாங்க எப்பவுமே ஃபர்ஸ்ட் ராங்க்” “உங்க கிட்ட கெட்ட பழக்கமே ஒண்ணும் இல்லையா?”பேட்டி எடுத்தவர் கேட்டார். “பொய் அதிகம் சொல்வேனுங்க”என்றார் கிரிக்கெட்டர்.

பொய் சாத்தானின் ஆயுதம். உண்மை கடவுளின் தன்மை. கடவுள் தமது பிள்ளைகள் உண்மையாக நடக்க வேண்டும் என்று விரும்புகிறார். வேதாகமத்துக்கும் சத்திய வேதம் என்று பெயர் இருக்கின்றது. இந்த உலகத்தில் வியாபாரம், தொழில்கள், பணிகள், விளம்பரங்கள், ஊடகங்கள் போன்ற எல்லாவற்றிலும் காணப்படும் பொய்கள், நமக்கு பொய் என்பது சாதாரணமானது, பொய் இல்லாமல் பிழைக்கமுடியாது என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. ஆனால் நானே சத்தியம் என்று சொன்ன ஆண்டவர், அவரைப் பின்பற்றுபவர்கள் உண்மையாக நடக்க வேண்டும் என்று விரும்புகிறார்.

சிந்தனை : உண்மையாக நடப்பது கடினமானது தான், ஆனால் கடவுளைப் பிரியப்படுத்துவது தான் முக்கியமானது.


ஜெபம் : சத்தியமானவரே, உம்மைப் பிரியப்படுத்த, உண்மையை என் வாழ்வில் காட்ட உதவி செய்யும். உண்மையின் வல்லமையை உணர அருள் செய்யும். ஆமென்.


For Audio Tracks visit : DD-Tamil

For Older Posts visit : http://dropindeocean.blogspot.com/
--
http://micyell.com
micyellmedia@gmail.com
Mobile : 09994258788

No comments: