நீதிமொழிகள் 10
சொற்களின் மிகுதியில் பாவமில்லாமற்போகாது; தன் உதடுகளை அடக்குகிறவனோ புத்திமான். - நீதிமொழிகள் 10:19
ஒரு பைசாவுக்கு ஒரு மணிநேரம் பேசலாம், எஸ் எம் எஸ் இலவசம், சிம் கார்டு இலவசம் என்று ஒரு எஸ் எம் எஸ் வந்தது. கீழே வாசித்த போது, அது ஒரு ஜோக் என்று புரிந்தது. ஆனால் நீங்க தான் டவர் நட்டுக்கவேண்டும் என்ற வார்த்தைகளே அந்த ஜோக்கின் கடைசி வார்த்தையாக இருந்தன.
அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்று சொல்வார்கள். சுருக்கமாகப் பேசும் ஒருவர் இன்னும் பேச மாட்டாரா என்று நான் எதிர்பார்ப்போம். ஆனால் லொட லொட என்று பேசுபவர்களை நாம் ஒதுக்கிவிடுவோம். இந்தியா மொபைல் ஃபோன்களை உற்பத்தி செய்வதிலும், விற்பதிலும், பயன்படுத்துவதிலும் உலகத்திலேயே முதலாவதாக மாறிக்க்கொண்டிருக்கின்றது. நமக்கு அவசியமானது என்றாலும் நேரத்தையும் பணத்தையும் வீணடிப்பதில் மொபைல் ஃபோன் முதல் இடத்தைப் பிடித்துக் கொண்டிருக்கின்றது.
உறவுகள் மனிதனுக்கு மிகவும் அவசியம் ஆனால் தேவையில்லாத பேச்சுக்கள் உறவுகளையே கெடுத்துவிடும். உதாரணமாக திருமணத்துக்கு முன்பாக எல்லாவற்றையும் அலைபேசியில் பேசித் தீர்த்துவிட்டவர்களுக்கு திருமணத்துக்குப் பின் பேசுவதற்கு எதுவுமே இல்லாமல் போய்விடும். அப்படியே நம்மை நேரில் பார்க்க முடியாதவர்கள் தவறான முறையில் நம்முடன் பேச்சுக் கொடுத்து பிரச்சனைகளை வரவழைக்க முடியும்.
நமது பேச்சுக்களை குறைத்து பிறரது பேச்சுக்களை கவனித்துக் கேட்பதன் மூலம் பிறரைப்பற்றியும் உறவுகளைப் பற்றியும் நாம் அதிகம் கற்றுக் கொள்ள முடியும். உதடுகளை அடக்கும் போது மனம் அதிகம் சிந்திக்கிறது. வார்த்தைகளும் அளவுடன் வெளிவருகின்றது. இதன் மூலம் பாவத்தை, வீண் பிரச்சனைகளைக் குறைக்கலாம்.
சிந்தனை : இந்த வாரத்தில் என் பேச்சைக் குறைத்து, அதன் மூலமாகப் பெற்ற, கற்ற நல்ல விஷயங்களைக் குறிப்பு எடுத்து வையுங்கள். உங்களுக்கே ஆச்சரியமாக இருக்கும்.
ஜெபம் : வார்த்தையாகிய கர்த்தாவே, என் வார்த்தைகளைக் குறைத்து, பிரச்சனைகளை உருவாக்கும் சொற்களைத் தவிர்க்க ஞானத்தைத் தாரும். ஆமென்.
For Audio Tracks visit : DD-Tamil
No comments:
Post a Comment