நீதிமொழிகள் 6
சோம்பேறியே, நீ எறும்பினிடத்தில்போய், அதின் வழிகளைப் பார்த்து, ஞானத்தைக் கற்றுக்கொள். - நீதிமொழிகள் 6:6
ஜிம் ரோன் என்பவர் எறும்புத்தத்துவம் என்று நான்கு குறிப்புகளைக் கொடுக்கின்றார்: 1. எறும்புகள் எப்போதுமே சலிப்படைவதில்லை. 2. அவைகள் கோடைக்காலம் முழுவதுமே குளிர்காலத்தைப் பற்றியே நினைத்துக் கொண்டிருக்கும். 3. குளிர்காலம் முழுவதும் கோடைக்காலத்தைப் பற்றி சிந்தித்துக்கொண்டிருக்கும். 4. தங்களால் முடிந்தவரைக்கும் ஆகாரத்தை சேமித்து வைக்கும்.
ஆறறிவுள்ள மனிதன் எறும்பு போன்ற சிறிய உயிரினத்திடமிருந்து ஞானத்தை எப்படிக் கற்றுக் கொள்ள முடியும்? அறிவு இல்லாமலேயே கடவுளின் அமைப்பின்படி அவைகள் தங்கள் வாழ்க்கையை சிறப்பாக அமைத்துக் கொள்கின்றன.
பிரபு, தலைவன், அதிகாரி ஆகியோர் எறும்புகளுக்கு இல்லை. அதாவது கோடைக்காலத்தில் அதிகம் வேலை செய்யும் சூழ்நிலை இருக்கும், அறுப்புக்காலத்தில் அதிக ஆகாரம் கிடைக்கும், பின்னர் வரும் குளிர்காலத்தில் வெளியே போக முடியாது, ஆகாரமும் கிடைக்காது எனவே கிடைக்கின்ற காலத்தில் உணவை சேர்த்து வைக்க வேண்டும் என்று எந்தத் தலைவனும் அவற்றிற்குச் சொல்லிக் கொடுப்பதில்லை. அவைகள் வேலை செய்வதை மேற்பார்வை செய்து சரியாகச் செய்யவும் தவறுகளைத் தவிர்க்கவும் எந்த அதிகாரியும் எறும்புகளுக்கு இருப்பதில்லை. ஆனாலும் அவைகள் தங்கள் வேலைகளை சிறப்பாக நமக்கு மாதிரிகளாக இருந்து செய்கின்றன.
ஆனால் நமக்கு ஆறாவது அறிவும், எத்தனையோ தலைவர்களும் அதிகாரிகளும், அறிவுரைப் புத்தகங்களும் இருந்தும் நாம் எப்படி நமது வாழ்க்கையை நடத்துகிறோம் என்ற கேள்வி தான், எறும்பினிடத்தில் போய் கற்றுக் கொள் என்ற அறிவுரையைத் தருகின்றது.
சிந்தனை : எறும்புகளுக்கு ஆகாரம் சேர்ப்பது ஒன்றைப் பற்றித் தான் அதிகம் தெரியும். நம்மைப் பார்த்து கற்றுக் கொள்ளும் அளவுக்கு எறும்புகளுக்கு ஞானம் இல்லை. ஆனால் நமக்கு இருக்கும் பகுத்தறிவுக்காக கடவுளுக்கு நன்றி செலுத்துவோம்.
ஜெபம் : கர்த்தாதி கர்த்தாவே, சுறுசுறுப்பும், ஞானமும், உமது சாயலில் இருக்கும் எனது வாழ்க்கையில் அதிகம் இருக்க எனக்கு உதவி செய்யும். ஆமென்.
For Audio Tracks visit : DD-Tamil
No comments:
Post a Comment