நீதிமொழிகள் 3
உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து, உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார். - நீதிமொழிகள் 3:5-6
தொலைக்காட்சியின் தீமைகளைப் பற்றி நீல் போஸ்ட்மேன் என்பவர் “சாவுக்கு நேராக நம்மை நாமே பொழுது போக்குதல்” என்ற புத்தகத்தை எழுதியிருந்தார். பல பத்திரிக்கைகளும் விமர்சகர்களும் அந்தப் புத்தகத்தைப் பற்றி அதிகமாகப் புகழ்ந்தபோது அவர் அந்தப் புத்தகத்தின் கருத்துக்களை வேதாகமத்திலிருந்து எடுத்ததாகச் சொன்னார்.
பல சாதனையாளர்கள் தங்களது அறிவியல் கண்டுபிடிப்புக்கள், சிறந்த கருத்துக்கள், புகழ்பெற்ற கலைப்படைப்புகள் ஆகியவை கடவுளிடமிருந்து தங்களுக்குக் கிடைத்ததாகச் சொல்லியிருக்கிறார்கள். நமது சுய புத்தி எப்போதுமே பலகீனமானது, பலவிதமான கட்டுப்பாடுகள் உள்ளது. ஆனால் கடவுளின் ஞானம் நம்முடன் இருக்கும் போது நாம் செல்லும் பாதைகள் நல்லவைகளாக இருக்கும். மோசமான பாதைகளும் சரிசெய்யப்படும்.
நம் முழு இருதயத்தோடும் கடவுளில் நம்பிக்கையாக இருத்தல் என்பது சும்மா இருப்பது அல்ல. நாம் நமது வழிகளில் செல்லும் போது கடவுளை நினைத்துக் கொள்ள வேண்டும். நமது மனம் போன வழிகளில் போகாமல், கடவுள் காட்டும் பாதையில் போக வேண்டும். கடவுளை முழு இருதயதோடும் நினைத்துக் கொள்ளும் ஒருவன் தவறான பாதையில் போக மாட்டான். நம் பாதைகளை சரி செய்வதற்கு நமது சொந்த பலத்தில் முயற்சி செய்யக் கூடாது.
சிந்தனை : சுயபுத்தி குறைவுகளும் பலவீனமும் உள்ளது. உலகத்தைப் படைத்தவரின் ஞானம் நம்மை சரிசெய்வதுடன் ஆசீர்வதிக்கும்.
ஜெபம் : ஞானத்தின் ஊற்றாகிய கர்த்தாவே, எனக்கு வழிகாட்டியாகவும், பாதைகளை செவ்வைப்படுத்துகிறவராகவும், என் நம்பிக்கையாகவும் இருப்பதற்காக நன்றி. நான் என் சுயபுத்தியில் சாயாமல் இருக்க புத்தியைத் தாரும். ஆமென்.
For Audio Tracks visit : DD-Tamil
No comments:
Post a Comment