யோவான் 8:42-47
என் வசனத்தை நீங்கள் ஏன் அறியாமலிருக்கிறீர்கள்? என் உபதேசத்தைக் கேட்க மனதில்லாதிருக்கிறதினால் அல்லவா? - யோவான் 8:43
ஒகினாவா என்னும் தீவில் ஷிமாபுகு என்ற சமுதாயத்து மக்கள் கண்ணியமானவர்களாகவும் கிராமங்களை சுத்தமாகவும் வைத்திருந்தனர். பலஆண்டுகளுக்கு முன்பு அங்கு சென்றிருந்த ஒரு மிஷனரி இரண்டே பேர் கிறிஸ்தவர்களாக மாறும் வரை தான் அங்கே இருக்க முடிந்தது. ஆனால் அவர்களது மொழியில் வேதாகமத்தைக் கொடுத்து அதன்படி நடந்து கொள்ளுங்கள் என்று சொல்லிச் சென்றுவிட்டார் மிஷனரி. அந்த இருவரும் தங்கள் சமுதாயத்தை வேதத்தின் அடிப்படையில் கட்டி எழுப்பினார்கள். பத்துக்கட்டளைகளைத் தங்கள் சட்டமாகவும், மலைப்பிரசங்கத்தைத் தங்கள் சமுதாய வழிகாட்டியாகவும் ஏற்றுக் கொண்டனர். மாணவர்கள் தினமும் வேதாகமத்தை வாசிக்க வேண்டும். முக்கிய பகுதிகள் மனப்பாடம் செய்யப்பட்டன. ஒரு குடிமகனின் பொறுப்பு, உரிமைகள் மற்றும் மதிப்பு ஆகியவற்றைப் பற்றிய கருத்துக்களை அவர்கள் வேதாகமத்திலிருந்தே அறிந்து கொண்டனர். அங்கே பல ஆண்டுகாலமாக சிறைச்சாலையோ,விபச்சாரம், குடி, விவாகரத்து ஆகியவையோ இல்லை. மகிழ்ச்சியும் ஆரோக்கியமும் ஆட்சி செய்தன.
வேதவசனங்களைக் கேட்டு அவற்றிற்குக் கீழ்ப்படிய மனமுள்ளவர்களுக்கு கடவுள் வேதத்தை நன்றாகக் கற்றுத்தருகிறார். ஏனென்றால் வேதாகமத்தை எழுதியவரே கடவுளின் ஆவியானவர் தாம். அதே ஆவியானவர் தான் நமக்கு வேதவசனங்களை சரியான நேரத்தில் நினைவூட்டுவார் என்றும் வேதம் சொல்கிறது. இயேசுவின் உபதேசங்களைக் கேட்டு அதன்படி வாழ்க்கையை நடத்தத் தீர்மானிப்பவர்களுக்கு வேதவசனத்தைப் பற்றிய அறிவைக் கொடுக்க நல்ல போதகராகிய இயேசு ஆவலாய்க் காத்திருக்கின்றார். ஆனால் ஒரு கற்றுக் கொண்ட பாடங்களில் தேறாமல் புதுப்பாடம் கற்றுத் தரமாட்டார் இயேசு.
சிந்தனை : பள்ளி கல்லூரிகளில் எப்படியாவது அரியர் வைத்தாவது பாஸ் செய்துவிடலாம். ஆனால் வேதாகமத்தைப் பொருத்தவரை எல்லாவுமே ப்ராக்டிக்கல் தான்.
ஜெபம் : கர்த்தாவே உமது வசனத்தை முழுமனதோடு கேட்டு அதன்படி நடக்க என் வாழ்க்கை முறையை மாற்றி பலப்படுத்தும். ஆமென்.
For Audio Tracks visit : DD-Tamil
micyellmedia@gmail.com
Mobile : 09994258788
No comments:
Post a Comment