யோவான் 10:22-42
என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது; நான் அவைகளை அறிந்திருக்கிறேன், அவைகள் எனக்குப் பின்செல்லுகிறது.
- யோவான் 10:27
சிறு குழந்தைகள் தாங்கள் விரும்புகின்றவற்றை மட்டுமே கேட்கும் தன்மை உள்ளவர்கள். அவர்களுக்குத் தேவையானபோது மட்டுமே பெரியவர்களின் குரல்களைக் கேட்டு அவற்றிற்குப் பதில் கொடுப்பார்கள். அவர்கள் தாங்கள் செய்து கொண்டிருக்கும் செயல்களில் ஆழ்ந்து போயிருப்பார்கள், தங்களுக்குத் தொந்தரவு இருக்கக் கூடாது என்று நினைப்பார்கள். அல்லது அவர்கள் கேட்பவை அவர்களுக்குப் பிடித்தமில்லாததாக இருப்பதால் அந்த சத்தத்தை அவர்கள் அலட்சியம் செய்யலாம். பெரியவர்கள் அவர்கள் பாட்டுக்குப் பேசிக் கொண்டிருக்க சிறுவர்கள் தங்கள் விளையாட்டைத் தொடர்ந்து கொண்டிருக்கலாம் என்று ஒரு அறிஞர் சொல்கிறார். நாமும் கூட சிறுவர்களைப் போல பரம பிதாவின் சத்தத்தை அலட்சியம் செய்கிறவர்களாக இருக்க வாய்ப்புக்கள் உண்டு.
நாம் நமது பரமபிதாவை மதித்து நடப்போம் என்றால் அவரது சத்தத்தைக் கேட்டு, அவற்றுக்குக் கீழ்ப்படிய வேண்டும். அவர் நடத்திச் செல்லும் பாதையில் மட்டுமே நடக்க வேண்டும். அவர் நம்மை அறிந்திருப்பதால் அவர் நமக்குப் பொருத்தமான பாதையில் நம்மை நடத்துவார். அத்துடன் நாம் நடக்க வேண்டிய வழியையும் கற்றுத் தருவார். ஆகவே தான் நாம் அவர் சத்தத்துக்கு செவி கொடுக்க வேண்டும். அத்துடன் அவர் பின் செல்ல வேண்டும். அவர் நம்மை அறிந்திருக்கிறது போல நாமும் அவரை அறிந்திருந்தால், அவரது சத்தமும் வழிநடத்துதலும் நமது நன்மைக்காத் தான் என்பதைப் புரிந்து கொள்வோம். இந்தப் புரிதல் தான் நாம் அவர் சத்தத்துக்கு செவி கொடுத்து, உடனடியாகக் கீழ்ப்படியச் செய்யக்கூடியது. மேலும் அவர் நடத்தும் பாதையில் மட்டுமே வழி விலகாமல் நம்மை நடத்தக் கூடியது.
சிந்தனை : ஒரு தேவ ஆட்டுக்குட்டியாகத் தன்னையே பலியாகத் தந்தவரே நமது நல்ல மேய்ப்பன். அவரை நம்பலாம்.
ஜெபம் : நல்ல மேய்ப்பரே, உம் சத்தத்தைத் தவிர மற்றவற்றிற்கு என் செவியை சாய்க்காமலும், உம் பாதையைத் தவிர மற்றவற்றை நான் தவிர்க்கவும் ஞானமும் புத்தியும் தாரும். ஆமென்.
For Audio Tracks visit : DD-Tamil
micyellmedia@gmail.com
Mobile : 09994258788
No comments:
Post a Comment