Friday, May 18, 2012

May 19, முன் நன்றி

யோவான் 11:38-44


நீர் எனக்குச் செவிகொடுத்தபடியினால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். - யோவான் 11:41


ஜெபம் செய்யும் போதே ஜெபத்திற்குப் பதில் கிடைத்துவிட்டதாக நன்றி சொல்லி ஸ்தோத்தரிக்கிறார் இயேசு. ஹென்றி நோவன் என்னும் தேவமனிதன் நன்றி சொல்லி ஜெபிப்பதற்கு இன்னொரு கண்ணோட்டத்தைத் தருகிறார். நாம் நன்றி (Thank You) என்று ஆங்கிலத்தில் யாரிடமாவது சொன்னால் அவர்கள் வருக (Welcome) என்று சொல்வார்கள். அதாவது மீண்டும் நீங்கள் இதே உதவிக்கு வரலாம் என்ற அர்த்தம் தருகிறது அந்த வார்த்தை. நாமும் கடவுளிடம் உதவி கேட்டுச் சென்று, உதவி கிடைத்தபின்னர் அவருக்கு நன்றி சொன்னால் அவரும் வருக என்று சொல்வார். அதாவது மீண்டும் உதவிக்காக ஜெபிக்க வரலாம் என்று சொல்வார். ஆகவே நன்றி சொல்லும் போது மீண்டும் ஆண்டவரிடம் போகும் வாய்ப்பும் பாக்கியமும் நமக்குக் கிடைக்கின்றது. இதற்கு இன்னொரு அர்த்தமும் இருக்கின்றது. அதாவது நாம் நன்றி என்று சொல்லும் போது நான் மீண்டும் வருவேன் என்று ஆண்டவரிடம் சொல்கிறோம்.

லாசரு மீண்டும் உயிருடன் வருவார் என்று அறிந்திருந்தாலும் இயேசு பரம பிதாவிடம் ஜெபித்து நமக்கு முன்மாதிரியைக் காண்பித்திருக்கின்றார். அப்படியே நாமும் நமது ஜெபத்தில் ஆண்டவர் நமக்கு செவி கொடுத்திருக்கிறார் என்ற விசுவாசத்துடன் நன்றியுடன் துதிக்கும் போது அவரை மட்டுமே நாம் சார்ந்திருக்கிறோம் என்பதையும் வெளிப்படுத்துகிறோம். நமது எல்லா ஜெபங்களுக்கும் கடவுள் செவி கொடுக்கிறார் என்றாலும், எல்லா ஜெபங்களுக்கும் ஆம் என்று பதில் சொல்வார் என்று நாம் எதிர்பார்க்கக் கூடாது. ஆனால் நமது தேவை அல்லது ஆசை ஆகியவற்றை அவரிடம் சொல்லிவிட்டோம் அவர் கண்டிப்பாகக் கேட்டார். எனக்கு நல்லதும் சரியானதுமான பதிலைத் தருவார் என்று நாம் எதிர்பார்த்திருக்க வேண்டும்.

சிந்தனை : இயேசு கெத்சமனே தோட்டத்தில் ஜெபிக்கும் போது இந்தப்பாத்திரம் நீங்கட்டும் ஆனாலும் உம் சித்தத்தின்படியே ஆகட்டும் என்று ஜெபித்தார்.


ஜெபம் : ஜெபத்தைக் கேட்கிறவரே, என் ஜெபங்கள் ஒவ்வொன்றுக்கும் நீர் செவி கொடுக்கிறீர் என்பதை உணர்ந்து நன்றியுள்ள மகளாக மகனாக நான் வாழ எனக்கு அருள் புரியும். ஆமென்.


For Audio Tracks visit : DD-Tamil

For Older Posts visit : http://dropindeocean.blogspot.com/
--
http://micyell.com
micyellmedia@gmail.com
Mobile : 09994258788

No comments: