Tuesday, May 1, 2012

May 2, ஜீசஸ் சிக்ஸ்ட்டி ஃபைவ்

யோவான் 6:25-59


அப்பொழுது யூதர்கள்; இவன் தன்னுடைய மாம்சத்தை எப்படி நமக்குப் புசிக்கக் கொடுப்பான் என்று தங்களுக்குள்ளே வாக்குவாதம்பண்ணினார்கள். - யோவான் 6:52


மனிதனைத் தின்னும் நரமாமிச பட்சிணிகள் சில நாடுகளில் காடுகளில் இருப்பதாகக் கேள்விப்பட்டிருக்கின்றோம். ஆனால் இந்தியாவில் சில அமைப்புகள் கிறிஸ்தவர்கள் கிறிஸ்துவின் மாமிசத்தைப் புசித்து அவரது இரத்தத்தைப் பானம் பண்ணுவதாகச் சொல்லுவதால் கிறிஸ்தவர்களும் காட்டுமிராண்டிகள் என்று சொல்லியிருக்கின்றன. இங்கே இயேசுவின் மாமிசம் என்பது அப்படியே இயேசுவை சாப்பிடுவது என்று அர்த்தம் தரவில்லை. அவர் தனது உடலை பலியாகக் கொடுத்ததை நினைவுபடுத்திப் பார்க்கும் போது அவரது தியாகமும் நமக்கு உயிரைத்தரும் அவரது ஆன்மீக ஆற்றலும் நினைவுக்கு வரவேண்டும்.

இயேசுவின் பின் சென்ற யூதர்களில் பலர் அவர் செய்த அற்புதங்களால் கவரப்பட்டவர்கள் தாம். அதிலும் சிலர் அவர் இலவசமாக உணவு தருவதைக் கண்டு அவரைப் பின்பற்றியவர்கள். அவர்களது எண்ணம் முழுவதுமே சாப்பாட்டில் இருந்ததால் தான் இயேசு தன்னை உண்மையான உயிருள்ள உணவு என்று சொன்ன போது இயேசுவை நாம் எப்படி சாப்பிட முடியும் என்று கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

இயேசுவை ஒரு மந்திரவாதியாக, பரிசுகளைத் தரும் அன்புள்ள தாத்தாவாக மட்டும் பார்த்தால், அவர் நமக்குக் கற்றுத்தரும் முக்கியமான ஆன்மீகப் பாடங்களை நம்மால் புரிந்து கொள்ள முடியாமல் போய்விடும். முடிவே இல்லாத வாழ்வான நித்திய மோட்சத்திற்கு இந்த உலகத்திலேயே நாம் தகுதிப்படுத்தப்பட வேண்டும் என்றால் நமது ஆன்மீக வாழ்வு வளர வேண்டும். ஆன்மீக வாழ்வுக்கு உணவாக இயேசுவின் போதனைகள் மற்றும் கடவுளின் வார்த்தைகள் அடங்கிய வேதாகமம் தான் முக்கியத் தேவையானதாகும். இதைத்தான் இயேசு போதித்தார். ஆனால் ஆன்மீகத்தில் ஆர்வமில்லாதவர்கள் அதை அப்படியே அர்த்தம் செய்து கொண்டு இயேசுவை எப்படி சாப்பிடலாம் என்று வாக்குவாதம் செய்து கொண்டார்கள்.


சிந்தனை : இயேசு நமது ஆன்மீக உணவாக இருப்பதால் தான் மனிதர்களாகிய நம்மால் தெய்வீகக் குணங்களை வளர்த்துக் கொள்ள முடியும்.


ஜெபம் : ஜீவ அப்பமாகிய இயேசுவே, உம்மை ஆன்மீக உணவாக ஏற்றுக் கொண்டு, உம்மில் வளர என்னை தினமும் போஷியும். ஆமென்.


For Audio Tracks visit : DD-Tamil

For Older Posts visit : http://dropindeocean.blogspot.com/
--
http://micyell.com
micyellmedia@gmail.com
Mobile : 09994258788

No comments: