யோவான் 9:13-41
அவருக்குச் சீஷராக உங்களுக்கும் மனதுண்டோ? - யோவான் 9:27
கண் தெரியாமல் இருந்து சுகமானவரைத் திரும்பத்திரும்ப ஆன்மீகத் தலைவர்கள் கேள்விகளால் துளைத்த போது அவர் சூதுவாது இல்லாமல் இப்படிக் கேட்டார், “அவருக்கு சீஷராக உங்களுக்கும் மனதுண்டோ?“ ஆனால் அந்த மதத்தலைவர்களோ பார்வை கிடைத்த அந்த மனிதனைத் தங்கள் மதத்தை விட்டே தள்ளிவைத்துவிட்டார்கள். இதே நிலை இன்றும் கிறிஸ்தவத்தில் காணப்படுவதாக வருத்தப்படும் ஒரு ஊழியர் இவ்வாறு சொல்கிறார்:
“பல கிறிஸ்தவர்கள் இந்தக்காலத்தில் கிறிஸ்தவ போதைக்காரகளாகத் தான் இருக்கின்றார்கள். அவர்கள் சீஷர்கள் அல்ல. சீஷர்கள் சிலுவையைச் சுமப்பவர்கள். அவர்கள் இயேசுவையே நாடுவார்கள். கிறிஸ்தவ போதைக்காரர்களோ மகிழ்ச்சியை மட்டுமே தேடுவார்கள். சீஷர்கள் தங்களை ஒழுக்கத்துக்குள் வைத்துக் கொள்ள முயற்சி செய்வார்கள். அந்த முயற்சியால் கிடைக்கும் வளர்ச்சியால் மகிழ்ச்சியடைவார்கள். மதபோதைவாதிகளோ போதைப்பழக்கத்துக்கு அடிமையானவர்களைப் போல குறுக்குவழியில் மோட்சம் சேர முயற்சிப்பவர்கள். தானாகவே கிடைக்கும் மகிழ்ச்சி என்று ஒன்று இல்லை. இயேசு ஒரு போதை மருந்து அல்ல. அவர் பிதாவினிடத்தில் போகும் வழியாவார். ஆனால் அந்தப் பாதையானது நாம் சும்மா உட்கார்ந்திருக்க ஏதோ ஒரு வாகனம் நம்மை எடுத்துச் செல்வது போன்ற உல்லாசப் பயணம் அல்ல.”
பார்வை பெற்றவர் சீஷனானபோது அவர் ஆலயத்தைவிட்டு விலக்கப்பட்டார். அது தான் சீஷனின் சிலுவையைத் தூக்கும் அனுபவமாகும். ஆனால் மதத்தலைவர்களோ, இயேசுவின் போதனைகளில் இருக்கும் கடினமான வாழ்க்கையை விரும்பாததால் அவருக்கு சீஷராக அவர்களுக்கு மனம் இல்லாமல் இருந்தது.
சிந்தனை : சீஷன் என்பது பதவியல்ல, பொறுப்பு. சிலுவை என்பது நகை அல்ல, சுமை.
ஜெபம் : கிறிஸ்துவே உமது சீஷனாக சிலுவை சுமக்கவும், உம்மைப் பின்பற்றவும் எனக்கு பலம் தாரும். ஆமென்.
For Audio Tracks visit : DD-Tamil
micyellmedia@gmail.com
Mobile : 09994258788
No comments:
Post a Comment