Thursday, May 31, 2012

May 31, உணர்த்துதல்


யோவான் 16:5-16


அவர் வந்து, பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக்குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார். - யோவான் 16:8


இயேசு கிறிஸ்து மனிதனாக வந்தபோது அவருக்கு மனிதருக்கு இருந்த தடைகளும் கட்டுப்பாடுகளும் இருந்தன. அவரால் பாலஸ்தீனாவில் மட்டும் தான் இருக்க முடிந்தது. அதுவும் ஒரே வாழ்நாள் காலத்தில், மூன்று வருட காலம் மட்டுமே ஊழியம் செய்ய முடிந்தது. இயேசு உலகம் அனைத்துக்கும் ஆண்டவராக இருந்தாலும், அவர் மனிதனாக இருந்தபோது உலகம் முழுவதிலும் ஒரே நேரத்தில் பல இடங்களில் இருக்க முடியவில்லை. ஆனால் இயேசு கிறிஸ்து நம்முடன் இந்த உலகத்தில் இல்லை என்பதற்காகத் தான் பரிசுத்த ஆவியானவரை நம் ஒவ்வொருவருடைய உள்ளத்திலும் வைத்திருக்கின்றார்.

i) உலகத்தார் இயேசுவை விசுவாசியாதபடியினாலே பாவத்தைக்குறித்து ஆவியானவர் கண்டித்து உணர்த்துகிறார். ஏனென்றால் இயேசுவை விசுவாசிக்காமல் இருப்பதுவே ஒரு பாவமாகும். உண்மையை நம்பாமல் பொய்யைப் பின்பற்றுவது சத்தியமாகிய கடவுளுக்கு எதிரான பாவமாகும்.

ii) இந்த உலகத்தில் மனிதனாக வாழ்ந்த இயேசு நீதியைப் பற்றிப் போதித்தார். நீதியாகவே வாழ்ந்து காட்டினார். ஆனால் அவர் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினால் அவரைப் பின்பற்றுவர்களிடம் தங்கியிருந்து நீதியைக்குறித்து ஒவ்வொருவருக்கும் உணர்த்துவார். அநீதியாக நடக்கும் போது மனசாட்சியுடன் சேர்ந்து கண்டிப்பார்.

iii) இந்த உலகத்தின் அதிபதியாகிய சாத்தான் நியாயந்தீர்க்கப்பட்டு அக்கினிக்கடலில் தள்ளப்படப் போகிறான். ஆகவே அவனுக்கும் அவனுடைய தூதர்களுக்கும், அவனைப் பின்பற்றி நடப்பவர்களுக்கும் அதே அக்கினிக்கடல் தான் தண்டனை. இந்த நியாயத்தீர்ப்பைக்குறித்தும் பரிசுத்த ஆவியானவர் கண்டித்து உணர்த்துவார்.


சிந்தனை : ஆவியானவர் பரவச அனுபவத்தை மட்டும் கொடுப்பவர் அல்ல. கண்டித்து உணர்த்துகிறவர். நம் வாழ்வில் மாற்றம் இல்லாமல் பரவசம் மட்டும் இருந்தால் நமது ஆன்மீக வாழ்வில் எங்கோ பழுது ஏற்பட்டிருக்கின்றது என்று அர்த்தம்.


ஜெபம் : பரிசுத்த ஆவியானவரே, என் உள்ளத்தில் கண்டித்து உணர்த்தும் உமது பணியையும், தேற்றரவு தரும் உமது பணியையும் செய்ய என்னை ஒப்புக் கொடுக்கிறேன். ஆமென்.


For Audio Tracks visit : DD-Tamil

For Older Posts visit : http://dropindeocean.blogspot.com/
--
http://micyell.com
micyellmedia@gmail.com
Mobile : 09994258788

No comments: