Sunday, May 20, 2012

May 21, விலை உயர்ந்த தொழுகை

யோவான் 12:1-11


இந்தத் தைலத்தை முந்நூறு பணத்துக்கு விற்று, தரித்திரருக்குக் கொடாமல் போனதென்ன? - யோவான் 12:5


சிலர் சமுதாய சேவை செய்தால் மட்டும் போதும் சுவிசேஷ ஊழியம் தேவையில்லை என்பார்கள். சிலரோ, ஆத்துமா தான் முக்கியமானது எனவே சுவிசேஷ ஊழியம் மட்டும் தான் செய்ய வேண்டும், சமுதாயப்பணி தேவையில்லை என்று சாதிப்பார்கள். ஆனால் இயேசுவின் ஊழியத்திலோ இரு ஊழியங்களும் கை கோர்த்துச் சென்றதைத் தெளிவாகப் பார்க்கலாம்.

இப்படி இருந்தும், இயேசுவை அபிஷேகம் செய்ய பயன்படுத்தப்பட்ட தைலத்தை விற்று ஏழைகளுக்குக் கொடுக்கலாமே என்று யூதாஸ் சொல்கிறார். யூதாஸ் ஏழைகள் மேலுள்ள அக்கறையில் அதைச் சொல்லவில்லை என்பதை இயேசு அறிந்தபடியால், அதற்கு பதிலையும் இயேசு சொல்கிறார்.

ஏழைகள் எப்போதும் உங்களுடன் இருப்பார்கள், அவர்களுக்கு எப்போது வேண்டுமானாலும் ஊழியம் செய்து கொள்ளலாம். எப்போதும் ஊழியம் செய்து கொண்டு தான் இருக்க வேண்டும். ஆனால் இயேசுவாகிய தேவகுமாரன் இந்த உலகத்தில் இருக்கும் காலம் சில வருடங்களே அந்தக் காலத்தில் அவருக்கு செய்யப்படும் மரியாதையான தொழுகையும் அவசியமானது என்று இயேசு சொல்கிறார்.

நமது ஊழியங்களிலும் கூட இயேசுவை ஆராதிக்கிற நேரங்கள் முக்கியமானவைகள், அப்படியே எப்போதும் நம்முடன் இருக்கும் ஏழைகளுக்கு உதவி செய்வதுவும் முக்கியமானதாகும். ஆராதனை என்பது நமது வாழ்க்கையைத் தியாகம் செய்து, நேர்மையாக வாழ்வதன் மூலம் இயேசுவை மகிமைப்படுத்துவதுவே ஆகும். பாடல்களும், பரவச அனுபவங்களும் மட்டுமே விலைமதிப்புள்ள ஆராதனை என்று நினைத்தால் நம்மை நாமே ஏமாற்றுகிறவர்களாக இருப்போம். அவ்வாறே ஏழைகளுக்கு உதவி செய்வதைவிட ஊழியங்களுக்கு மட்டும் கொடுத்தால் போதும் என்று நினைப்பதுவும் நமக்கு நாமே செய்து கொள்ளும் ஏமாற்று தான்.


சிந்தனை : இந்தச் சிறியரில் ஒருவருக்கு எதைச் செய்தீர்களோ அதை எனக்கே செய்தீர்கள் என்று இயேசு சொன்னதன் அர்த்தம் என்ன?


ஜெபம் : கர்த்தாவே, இந்த உலகத்தில் உம்மை நேசிப்பதுவும், பிறரை நேசிப்பதுவும் சமமான கட்டளைகள் என்பதைப் புரிந்து கொள்ள உதவும். ஆமென்.


For Audio Tracks visit : DD-Tamil

For Older Posts visit : http://dropindeocean.blogspot.com/
--
http://micyell.com
micyellmedia@gmail.com
Mobile : 09994258788

No comments: