Monday, May 7, 2012

May 8, உல்ட்டா

யோவான் 8:1-11


இயேசு அவளை நோக்கி: நானும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறதில்லை; நீ போ, இனிப் பாவஞ்செய்யாதே என்றார். - யோவான் 8:11

ஒரு ஊழியர் இவ்வாறாகச் சொன்னார். நம்மிடம் இப்படிப்பட்ட ஒரு பாவியான பெண் வந்திருந்தால், ”இனி பாவம் செய்யாதே. பாவம் செய்யாமல் இருப்பதாக வாக்கு கொடுத்தால் நீ போகலாம்.” என்று தான் சொல்லியிருப்போம். பாவத்தையும் இனி வாழ வேண்டிய விதத்தையும் பற்றித் தான் நாம் முதலாவதாகப் பேசுவோம். ஆனால் இயேசுவோ, நான் உன்னைக் குற்றவாளியாகத் தீர்க்கிறதில்லை. நீ போ. என்று சொன்னார். ஆனால் இயேசு நம்மை அப்படியே பாவ வாழ்க்கையில் தொடர்ந்து இருக்க விட்டுவிடுவதில்லை. இனி பாவம் செய்யாதே என்றும் எச்சரித்து போதிக்கிறார்.

நமது பாவங்கள் கண்டு கொள்ளப்படாமல் நம்மை விட்டுவிட்டால் நாம் திருந்தி வாழ வழியில்லை. நாம் திருந்திய பின்பு தான் போகமுடியும், பாவத்துக்கான தண்டனை முதலில் கொடுக்கப்பட வேண்டும் என்று சொன்னால் யாருமே குற்றம் இல்லாதவர்களாக மாறும் வரை அனைவரும் காத்திருக்கத் தான் வேண்டும். ஆனால் பாவங்களை மன்னிக்க அதிகாரம் பெற்ற இயேசு சொல்கிறார். நீ போகலாம். ஆனால் பழைய பாவ வாழ்க்கை தொடரக் கூடாது. இயேசு இரக்கமுள்ளவர் அப்படியே நீதியுள்ளவர். இரக்கத்தைப் பெற்ற பின் பழைய பாவ வாழ்க்கையைத் தொடர முடியாது, கூடாது. ஏனென்றால் அவர் நீதியுள்ளவர். இரக்கமும் நீதியும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களைப் போன்றதாகும்.

நாமும் பிறருடன் பழகும் போது அவர்களை மன்னிப்பதுவும், ஏற்றுக் கொள்வதுவும் முக்கியம் ஆனால் மன்னிக்கப்பட்ட பின் பழைய குற்றங்கள் தொடர்ந்தால் மன்னிப்புக்கு அர்த்தம் இல்லாமல் போவதுடன் அவமதிப்பாகவும் போய்விடும். எனவே பெற்ற மன்னிப்புக்குத் தகுதியுள்ளவர்களாக வாழவேண்டுமென்றால் புதிய வாழ்வைத் துவங்க வேண்டும்.


சிந்தனை : மன்னிப்பு என்பது பழைய வாழ்க்கையைத் தொடருவதற்காக அல்ல, புதிய வாழ்க்கையைத் துவங்குவதற்காகக் கொடுக்கப்படுகிறது.


ஜெபம் : கர்த்தாவே நீர் என்னைக் குற்றவாளியாகத் தீர்க்காமல் இருக்கிறதற்காக நன்றி. நான் குற்றவாளியாக மாறிவிடாதபடி இனி பாவம் செய்யாமல் இருக்க, உம் தூய ஆவியானவர் எனக்குள் கண்டித்து உணர்த்தி வழி நடத்தும். ஆமென்.


For Audio Tracks visit : DD-Tamil

For Older Posts visit : http://dropindeocean.blogspot.com/
--
http://micyell.com
micyellmedia@gmail.com
Mobile : 09994258788

No comments: