Thursday, May 31, 2012

June 1, நிபந்தனைகள் உண்டு

யோவான் 16:17-33


உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன் என்றார். - யோவான் 16:33


ஒரு ஊழியர் தாய்க்கழுகு எப்படித் தன் குஞ்சுகளைப் பறக்கச் செய்கிறது என்று கதையாக விளக்குகின்றார். குஞ்சுகள் ஓரளவுக்கு வளர்ந்தவுடன், கழுகு தன் கூட்டைக் கலைக்கின்றது. குஞ்சு கேட்கின்றது, “அம்மா என்ன செய்றீங்க?” தாய் அதைக் கவனிக்காதது போல கூட்டிலிருந்து குச்சிகளை ஒவ்வொன்றாக கீழே வீசுகின்றது. “அம்மா என்ன பண்ணிட்டு இருக்கீங்கன்னு கேக்கறேன் இல்ல?” குஞ்சு கத்துவதைத் தாய் பொருட்படுத்தவில்லை. “அம்மா நாங்க இன்னும் பறந்து போகிற அளவுக்கு பெரிசா வளரல.” தாய்க்கு அந்தக் குஞ்சுகளின் மேல் வெறுப்பா? இல்லை. அவைகள் தானாகவே பறந்து பிழைத்துக் கொள்ளவேண்டும் என்பதற்காகத் தான் அது அப்படி கூட்டைக் கலைத்து, குஞ்சுகளைப் பறப்பதற்கு கட்டாயப்படுத்துகின்றது. அவைகள் கூட்டுக்குள்ளேயே பத்திரமாக, சொகுசாக இருப்பதற்காக அல்ல, வானத்தில் பறப்பதற்காகப் படைக்கப்பட்டவைகள். அதைத்தான் தாய்ப்பறவை தன் குஞ்சுகளைச் செய்ய வைக்கின்றது.

இயேசு கிறிஸ்துவும் நம்மை இந்த உலகத்துக்குள் அனுப்பும் போது நமக்கு உபத்திரவங்கள் உண்டு என்று சொல்கிறார். தாய்க்கழுகைப் போல அவரும் இந்த உலகத்தில் மனிதனாக வாழ்ந்ததால் நமக்குத் தேவையான உபத்திரவம் எது என்பது அவருக்குத் தெரியும். நாம் உபத்திரங்களுக்குள் செல்லும் போது தான் உன்னதமான ஆன்மீக வானத்தில் நம்மால் பறக்க முடியும் என்பதால் தான் நமது சொகுசானதும் பாதுகாப்பானதுமான சூழல்களைக் கலைத்து நம்மைப் பறக்கச் செய்கிறார்.


சிந்தனை : நான் பட்ட கஷ்ட்டத்தை நீயும் படு என்னும் பொறாமைக் குணமோ, நான் பட்ட கஷ்ட்டத்தை நீ படக்கூடாது என்ற பாசமோ அல்ல, நீ கஷ்ட்டப்பட்டால் தான் திடன் அடைய முடியும் பறக்க முடியும் என்ற நடைமுறைக் கருத்தைத்தான் சொல்கிறார் நம் இரட்சகர் இயேசு.


ஜெபம் : பரமபிதாவே, எனக்கு எது நல்லது என்பது உமக்குத் தெரியும். என் உபத்திரவங்களையும் நீர் அறிவீர். தாங்குவதற்கும் ஏற்றுக்கொள்வதற்கும் பலம் தாரும். ஆமென்.


For Audio Tracks visit : DD-Tamil

For Older Posts visit : http://dropindeocean.blogspot.com/
--
http://micyell.com
micyellmedia@gmail.com
Mobile : 09994258788

No comments: