யோவான் 11:45-57
ஜனங்களெல்லாரும் கெட்டுப்போகாதபடிக்கு ஒரே மனுஷன் ஜனங்களுக்காக மரிப்பது நமக்கு நலமாயிருக்குமென்று நீங்கள் சிந்தியாமலிருக்கிறீர்கள். - யோவான் 11:50
உங்க பணம் கீழே விழுந்திருக்குதா பாருங்க என்று நல்லவர்கள் மாதிரி கேட்பவர்கள் பொதுவான இடங்களில் இருப்பார்கள். நாம் கீழே விழுந்து கிடக்கும் பணம் நம்முடையது தானோ என்று நினைத்து குனிவதற்குள் நம்மிடம் இருக்கும் பை, பணம் போன்ற விலையுயர்ந்த பொருட்கள் காணாமல் போயிருக்கும். இப்படித்தான் நம் மேல் அக்கறை கொள்ளும் தீயவர்களின் செயலும் இருக்கும். பிரதான ஆசாரியனாகிய காய்பா பொறாமையின் காரணமாக இயேசுவைக் கொல்ல வேண்டும் என்ற திட்டத்திற்கு ஏற்கனவே ஒத்துக் கொண்டிருந்தாலும் மக்கள் மேல் உள்ள அக்கறையில் சொல்வது போலச் சொல்கிறார்.
காய்பா ஊழல் செய்யும் கூட்டத்தில் இருந்தாலும், அவர் பிரதான ஆசாரியன் என்னும் கடவுள் ஏற்படுத்திய பதவியில் இருந்ததால் இவ்வாறு தீர்க்கதரிசனமாகச் சொல்கிறார். இயேசு கிறிஸ்துவும் உலகத்தின் ஜனங்கள் எல்லோரும் கெட்டுப் போகாமல் நித்திய ஜீவனை அடையும் படியாகத் தான் தனது உயிரைத் தருவதற்காக இந்த உலகத்துக்கு வந்தார். ஆனால் காய்பா சொல்லும் விதம் வேறாக இருக்கின்றது. ரோமர்கள் வந்து யூதர்களைக் கொல்லாதபடிக்கு, இயேசுவை யூதர்களுக்குப் பதிலாகக் கொல்லலாம் என்கிறார் காய்பா.
கடைசிக்காலங்களில் வரும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் கூட தவறான நோக்கத்தில் நல்ல ஊழியத்தைச் செய்ய வாய்ப்பு இருக்கிறது என்று வேதாகமத்தில் இருந்து நாம் தெரிந்து கொள்ளலாம். அவர்கள் தாங்கள் செய்த ஊழியங்களைச் சொல்லி பரலோகத்தில் நுழைய வாய்ப்புக் கேட்கும் போது உங்களை எனக்குத் தெரியாது என்று இயேசு சொல்லிவிடுவார். அது மட்டுமல்ல, அவர்கள் சொல்கிறபடி செய்யுங்கள், அவர்கள் செய்கிறதைப் பின்பற்றாதேயுங்கள் என்றும் வேஷத்துடன் திரியும் மதத்தலைவர்களைப் பற்றி இயேசு சொல்லியிருக்கிறார்.
சிந்தனை : நாம் செய்யும் செயல்களும், சொல்லும் சொற்களும் முக்கியமல்ல, நம் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பது தான் முக்கியமானது.
ஜெபம் : தேவனே, எனது வார்த்தைகள் நேர்மையானவைகளாக இருக்கவும், உமக்குப் பிரியமானவைகளாக இருக்கவும் என்னை தினமும் சுத்தப்படுத்தும். ஆமென்.
For Audio Tracks visit : DD-Tamil
micyellmedia@gmail.com
Mobile : 09994258788
No comments:
Post a Comment