யோவான் 8:48-59
உங்கள் பிதாவாகிய ஆபிரகாம் என்னுடைய நாளைக் காண ஆசையாயிருந்தான்; கண்டு களிகூர்ந்தான் என்றார். - யோவான் 8:56
இறந்தவர்களுடன் பேசுவது, ஆவிகளுடன் தொடர்பு கொள்வது போன்றவைகள் ஒரு கலாச்சாரம் போலப் பரவி வருகின்றது. ஆர்வத்தாலும், தைரியத்தாலும் இந்தப் பெரும் வலைக்குள் போய் விழுந்துவிடுகின்றனர். ஆனால் வேதாகமத்தில் இறந்தவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்ற்பது பற்றி மிகவும் மங்கலான பகுதிகள் தாம் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இறந்தவர்கள் ஒருவரை ஒருவர் அடையாளம் கண்டு கொள்ள முடியும் என்பது லாசரு, பணக்காரன் சம்பவத்தின் மூலம் தெரிகின்றது. அப்படியே ஆபிரகாம் இயேசுவின் நாளைக் காண ஆவலாயிருந்ததுடன், அதைக் கண்டு மகிழ்ச்சியடைந்தார் என்றும் இயேசு கூறுகிறார்.
இயேசு தான் ஒரு சாதாரண போதகர் அல்ல, ஆபிரகாமுக்கும் முன்பு உலகத்தோற்றத்திற்கும் முன்பே ஆண்டவராக இருந்ததவர் என்பதை யூதர்களுக்குச் சொல்வதற்காக இந்த வார்த்தைகளைச் சொன்னார். ஆனாலும் கூட ஆபிரகாமை ஒரு பெரும் தகப்பனாக நினைத்த யூதர்கள் இயேசுவை மதிக்கவே இல்லை. அவர்களால் இயேசுவை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால் தான் அவர்கள் அவரைக் கல் எறிய முயற்சி செய்தார்கள். முற்பிதாக்களைவிட அவர்களை உருவாக்கிய ஆண்டவர் பெரும் மதிப்புக்கும் வழிபாட்டுக்கும் தகுதியுள்ளவர் என்னும் சாதாரண உண்மை கூட அவர்களுக்குத் தெரியவில்லை. வெளிப்புறமான இயேசுவின் வயது மற்றும் தொழில் ஆகியவற்றையே அவர்கள் கவனித்ததுடன், அவரைக் குற்றம் காண்பதிலேயே குறியாக இருந்தார்கள்.
நாமும் இயேசுவுக்கு மேலாக எந்தத் தலைவரையோ, ஆன்மீகவாதிகளையோ வைத்திருந்தால் நம்மால் இயேசுவின் உண்மையான தெய்வீகத் தன்மையையோ வல்லமையையோ காணமுடியாது. இயேசு தமது வல்லமையையும் புகழையும் வேறு யாருக்கும் கொடுக்கவும் மாட்டார். ஆகவே நாம் இயேசுவுக்கு உரிய புகழை வேறு யாருக்கும் கொடுக்காமல் இருப்பதில் கவனமாக இருப்போம்.
சிந்தனை : இயேசுவைப் போல மாறுவதே நமது நோக்கமாக இருந்தாலும், எந்தத் தலைவரோ பரிசுத்தவானோ இயேசுவின் இடத்தைப் பிடிக்க முடியாது.
ஜெபம் : கடவுளே, உமது மகிமையைக் காணமுடியாதவாறு யாரும் எங்கள் கண்களை மறைக்கவிடாமல் காத்துக் கொள்ளும். ஆமென்.
For Audio Tracks visit : DD-Tamil
micyellmedia@gmail.com
Mobile : 09994258788
No comments:
Post a Comment