Thursday, May 17, 2012

May 18, இயேசு கண்ணீர் விட்டார்

யோவான் 11:17-37


இயேசு கண்ணீர் விட்டார். - யோவான் 11:35

உலகப்புகழ் பெற்ற கவிஞர் வேர்ட்ஸ் வொர்த் அவர்கள் கல்லறையைப் பற்றி இவ்வாறு எழுதியிருந்தார்:

ஒரு கல்லறை

ஒரு கல்லறை என்பது நம்மை அமைதிப்படுத்தும் இடம்

அது சோகத்தை எதிர்பார்க்கிறது.

மவுனத்தைக் கேட்கிறது.

கண்ணீரை வற்புறுத்தி வரவழைக்கிறது.

சிறு குழந்தைகளாக இருந்தபோது மனப்பாடம் செய்வதற்கு எளிதாக இருப்பதால் நாம் கற்றுக் கொண்ட சில வசனங்களில் இதுவும் ஒன்றாகும். ஆனால் இதில் ஒரு மாபெரும் சத்தியம் அடங்கியிருக்கின்றது. இயேசு ஒரு மனிதனாக இந்த உலகத்துக்கு வந்தபோது அவர் நம்மைப் போலவே அழுதார். ஆகவே அழுகின்ற நமக்கு அவர் ஆறுதல் தருவார். அவர் நம்மைப் பற்றி அக்கறை உள்ளவர் ஆகையால் தான் அவர் கண்ணீர் விட்டார்.

நம் ஆண்டவர் வானத்தில் எங்கோ இருந்து கொண்டு நம்மை இயக்குபவர் அல்ல. நம் அருகில் இருந்து கொண்டு நம்மோடு நமது துக்கங்களில் கண்ணீர் விட்டு, நமக்காக பெருமூச்சுகளுடன் ஜெபித்து, நமக்காகப் பரமபிதாவிடம் பரிந்து பேசுகிறவரே நம் இயேசு. எனவே தான் சிறுவயதில் கற்றுக் கொண்ட மிகச்சிறிய வசனமாக இருந்தாலும் நமது முதிர் வயதிலும் பெரும் நம்பிக்கையையும் ஆறுதலையும் தரும் வசனமாக இது இருக்கின்றது.

சிந்தனை : இயேசுவின் கண்ணீர் என்னைப் புரிந்து கொள்ளும் கண்ணீர். இயலாமையின் கண்ணீர் அல்ல அது.

ஜெபம் : என் இரட்சகரே, என் சோகத்தில் உம் பிரசன்னைத்தையும் கண்ணீரையும் உணர்ந்து ஆறுதல் பெற வழிநடத்தும். ஆமென்.


For Audio Tracks visit : DD-Tamil

For Older Posts visit : http://dropindeocean.blogspot.com/
--
http://micyell.com
micyellmedia@gmail.com
Mobile : 09994258788

No comments: