Sunday, June 10, 2012

June 10, அந்தரங்க சீஷர்கள்

யோவான் 19:38-42


யூதருக்குப் பயந்ததினால் இயேசுவுக்கு அந்தரங்க சீஷனுமாகிய யோசேப்பு இயேசுவின் சரீரத்தை எடுத்துக் கொண்டு போகும்படி பிலாத்துவினிடத்தில் உத்தரவு கேட்டான். - யோவான் 19:38


இந்தியாவில் பயத்தாலும், அரசு உதவிகளை இழந்துவிடக்கூடாது என்ற எச்சரிக்கையாலும், குடும்பத்தின் மேலுள்ள பாசத்தாலும் அந்தரங்க கிறிஸ்தவர்களாக இருப்பவர்கள் பலர். சீஷன் என்பவன் குருவை பிரதிபலிப்பவன், துணிச்சலாகப் பின்பற்றுபவன் ஆகவே அந்தரங்க சீஷன் என்ற வார்த்தை முரண் போன்றது. யோசேப்புவும், நிக்கோதேமுவும், இயேசுவின் அதிகாரப்பூர்வ சீஷர்கள் செய்யாததைச் செய்துவிட்டார்கள். பிலாத்துவிடம் போய் அனுமதி வாங்கி, வாசனைப் பொருட்களுடன் இயேசுவின் உடலை அடக்கம் செய்தனர். இதில் யோசேப்புவின் புதிய கல்லறை முக்கிய ஆதாரமாக இருந்ததால், பின்னர் யோசேப்பு தண்டிக்கப்பட்டாரா அல்லது பகிரங்கமாக இயேசுவின் சீஷரானாரா என்று வேதாகமத்தில் தெளிவான ஆதாரங்கள் இல்லை என்றாலும் அவர்கள் ஆதித் திருச்சபையில் முக்கிய தலைவர்களாக இருந்திருப்பார்கள் என்று நாம் உறுதியாக நம்பலாம்.

பலரது சூழ்நிலைகள் எப்படி இருக்கின்றன. அந்த சூழ்நிலைகளில் அவர்கள் எப்படி செயல்படுகிறார்கள் என்பது கடவுளுக்கு மட்டுமே தெளிவாகத் தெரியும் ஆகவே நாம் யாரையும் குறை சொல்லக் கூடாது. ஆனால் நமக்கு வாய்ப்புக்கள் இருக்கும் வரை பகிரங்கமாக இயேசுவின் சீஷர்கள் நாம் என்பதைச் சொல்ல வேண்டும். இந்த உலகத்தில் மக்கள் நடுவில் இயேசுவைப் பற்றிச் சொல்ல நாம் வெட்கப்பட்டாலோ அல்லது பயப்பட்டாலோ, நியாயத்தீர்ப்பின் காலத்தில் தூதர்கள் மத்தியில் இயேசுவும் நம்மைப் பற்றிச் சொல்ல வெட்கப்படுவார். அந்தரங்கத்தில் இருப்பவர்களும் எப்படியும் ஒரு நாளில் வெளியே வந்து தான் ஆகவேண்டும் என்பதைப் புரிந்து கொண்டு நம்மைப் பலப்படுத்திக் கொள்ள வேண்டும்.


சிந்தனை : அந்தரங்கத்தில் பார்க்கிற தேவன் வெளியரங்கமாகப் பலனளிப்பார். எனவே அந்தரங்க சீஷனுக்கு வெளியரங்கமாகக் கிடைக்கும் பலன், அவர்களது வாழ்க்கை முறை ஆகியவைகள் அவர்களைக் காட்டிக் கொடுத்துவிடும்.


ஜெபம் : கர்த்தாவே எந்தச் சூழ்நிலையிலும் உம்மைப்பற்றி வெட்கமோ பயமோ ஏற்படாமல் உமக்கு சாட்சியாக இருக்க பெலப்படுத்தும். ஆமென்.


For Audio Tracks visit : DD-Tamil

For Older Posts visit : http://dropindeocean.blogspot.com/
--
http://micyell.com
micyellmedia@gmail.com
Mobile : 09994258788

No comments: