Tuesday, June 19, 2012

June 18, இரட்டைத் தீமை

எரேமியா 2


உன் தீமை உன்னைத் தண்டிக்கும், உன் மாறுபாடுகள் உன்னைக் கண்டிக்கும்; நீ உன் தேவனாகிய கர்த்தரை விடுகிறதும், என்னைப் பற்றும் பயம் உன்னிடத்தில் இல்லாமலிருக்கிறதும், எத்தனை பொல்லாப்பும் கசப்புமான காரியம் என்று உணர்ந்துகொள். - எரேமியா 2:19

கடவுளைத் தங்கள் ஆராதனைகளிலும், வாழ்க்கையிலும் அடிக்கடி குறிப்பிடும் மக்களுக்கு கடவுளைப் பற்றிய பயம் இல்லை. உதட்டில் துதி இருந்தாலும் மனதில் ஆழத்தில் கர்த்தர் இல்லை. இதையே பொல்லாப்பும், கசப்புமானது என்று எரேமியாவின் மூலம் கடவுள் இஸ்ரவேலருக்குச் சொல்லுகிறார்.

பக்தியையும், நேசத்தையும் விட்டுவிட்டார்கள்.

பரிசுத்தமும், அவருடைய விளைவின் முதற்பலனுமாயிருந்தவர்கள் புறஜாதிகளின் தேவர்களைத் தேடினார்கள்

எகிப்துதேசத்திலிருந்து வரப்பண்ணினவரும், ....வனாந்தரத்தில் நடத்தினவருமாகிய கர்த்தரை மறந்தார்கள்.

ஜீவத்தண்ணீர் ஊற்றாகிய கடவுளை விட்டுவிட்டார்கள்; தண்ணீர் நிற்காத வெடிப்புள்ள தொட்டிகளை வெட்டிக்கொண்டார்கள்.
கர்த்தரை விடுகிறதும், அவரைப் பற்றும் பயம் இல்லாமலிருக்கிறதும் அடுத்த பொல்லாப்பு.

கடவுளுக்குப் பயப்படும் பயமும், அவருடனேயே இருப்பதுவும் ஒன்றை ஒன்று சார்ந்த விஷயங்களாகும். கடவுளை விட்டு விலகும்போது அவருக்குப் பயப்படும் பயம் குறைந்துவிடும். கடவுளுக்குப் பயப்படாதவர்கள் அவரை விட்டு விலகிச் செல்வார்கள். எனவே நம் வாழ்வில் பயத்தால் நடுங்கும் வகையில் அல்ல, கடவுளுக்காக மரியாதையைக் கொடுப்பதால் அவருக்குப் பயப்பட வேண்டும். அவரை விட்டு விலகாமல் இருக்கும் அளவுக்கு அவர் மேல் நேசத்தையும் வைத்திருக்க வேண்டும்.

சிந்தனை : அன்பு பயத்தைப் போக்கும். கடவுள் பயம் அவர் மீது அன்பை வளர்க்கும்.

ஜெபம் : கடவுளே உமக்குப் பயப்படும் பயத்தையும் உம்மை முழு மனதோடு நேசிக்கும் இதயத்தையும் என்னில் பலப்படுத்தும். ஆமென்


For Audio Tracks visit : DD-Tamil

For Older Posts visit : http://dropindeocean.blogspot.com/
--
http://micyell.com
micyellmedia@gmail.com
Mobile : 09994258788

No comments: