Thursday, June 14, 2012

June 14, டவுட் தாமஸ்

யோவான் 20:24-31


இயேசு: ”தோமாவே, நீ என்னைக் கண்டதினாலே விசுவாசித்தாய், காணாதிருந்தும் விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள்” என்றார். - யோவான் 20:29


அவிசுவாசம் நமது சூழ்நிலையை நமக்கும் கடவுளுக்கும் நடுவே வைத்துவிடுகின்றது. ஆனால் விசுவாசமானது நமக்கும் நம் சூழ்நிலைக்கும் நடுவே கடவுளை வைக்கிறது. - எஃப் பி மேயர்

நமது எதிர்பார்ப்புக்கும் மேலானதைக் கடவுளிடமிருந்து எதிர்பார்க்கின்றது விசுவாசம். - ஆண்ட்ரு முர்ரே

கவலையின் துவக்கமே விசுவாசத்தின் முடிவாகும். உண்மையான விசுவாசத்தின் துவக்கமோ கவலையை முடிவுக்குக் கொண்டுவரும். - ஜார்ஜ் முல்லர்.

தோமாவின் சந்தேகங்கள் அவரது விசுவாசத்தைப் பலப்படுத்தவே உதவியது. அவரது சந்தேகப்படும் மனமானது ஆதாரங்களைத் தேடக்கூடியதாகும். அதனால் தான் இயேசு அவரிடம் என் காயத்தில் உன் விரல்களைப் போட்டுப் பார் என்று சொன்னார்.

தோமாவுக்குக் கிடைக்காத ஒரு பாக்கியம் நமக்குக் கிடைத்திருக்கின்றது. அது தான் காணாதிருந்தும் இயேசுவை விசுவாசித்தல் ஆகும். ஆதாரங்களைக் கண் முன் வைத்துக்கொண்டு நம்புவது என்பது எளிதானதாகும். ஆனால் காணாத ஒன்றை நம்புவதன் மூலம் தான் நாம் நமது விசுவாசமானது உறுதியானது என்பதைக் காட்டுகின்றோம். உண்மையிலேயே ஆதாரங்களைக் கண்டபின் ஒரு விஷயத்தை நாம் நம்ப வேண்டும் என்ற அவசியமே இல்லை. ஆனால் விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது. என்று வேதாகமம் சொல்கிறது.

நமக்கு முன்பாக தோமாவைப் போன்றவர்கள் ஆதாரங்களைப் பார்த்து நம்பி தங்கள் உயிரையே அந்த நம்பிக்கைக்காகக் கொடுத்திருக்கிறார்கள். ஆகவே நாமும் ஆதாரங்களுக்காகக் காத்திருக்காமல் நமது நம்பிக்கையை கடவுள் மேல் வைப்போம். அவர் நமது விசுவாசத்தைத் துவக்கியது போல தனது பிரசன்னத்தால் அதை முடித்தும் வைப்பார்.


சிந்தனை : கண்டு விசுவாசிப்பது சாதாரணம். விசுவாசத்தினால் காண்பதுவே பாக்கியம்.


ஜெபம் : இயேசுவே, உம்மைக் காணாமலேயே விசுவாசிக்கும் பாக்கியத்தைத் தந்ததற்காக நன்றி. என் விசுவாசத்தை வர்த்திக்கச் செய்யும். ஆமென்.


For Audio Tracks visit : DD-Tamil

For Older Posts visit : http://dropindeocean.blogspot.com/
--
http://micyell.com
micyellmedia@gmail.com
Mobile : 09994258788

No comments: