Saturday, June 2, 2012

June 3, எனக்காக இயேசு செய்த ஜெபம்

யோவான் 17:20-26


நான் இவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறதுமல்லாமல், இவர்களுடைய வார்த்தையினால் என்னை விசுவாசிக்கிறவர்களுக்காகவும் வேண்டிக்கொள்ளுகிறேன்.- யோவான் 17:20


இயேசு தனது சீஷர்களுக்காக ஜெபித்தபோது நமக்காகவும் ஜெபித்திருக்கிறார். இந்த வசனத்தில் சீஷர்களுடைய வார்த்தையினாலே இயேசுவை விசுவாசித்தவர்களாகிய நமக்காகவும் அவர் வேண்டிக் கொண்டதைக் காணலாம். ஆகவே இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே இயேசு உங்களுக்காகவும் எனக்காகவும் ஜெபித்திருக்கிறார்.

நம்மைப்பற்றி இயேசு ஜெபிக்கும் போது ஒருமைப்பாட்டில் நாம் தேறினவர்களாக இருக்க வேண்டும் என்று ஜெபித்திருக்கிறார். இந்த ஜெபத்துக்கு நம்மால் ஒரு வகையில் பதிலாக மாற முடியும். நாம் நமது வேற்றுமைகளை மறந்து ஒற்றுமையாக இருப்பதை இந்த உலகத்தார் பார்க்கும் போது அது இயேசுவுக்கு மகிமையாக இருக்கும். நாம் ஒற்றுமையில் தேறினவர்களாக மாறும் போது இயேசுவின் ஜெபத்தின் பதிலாகவே நாம் மாறிவிடுகிறோம். ஆனால் இந்தக் காலத்தில் கிறிஸ்தவர்களுக்குள்ளேயே நாம் பலவிதமான பிரிவினைகளைப் பார்க்கிறோம். இந்தப் பிரிவினைகள் ஒவ்வொரு ஆராதனை முறைகள் அல்லது வேதாகமத்தைப் புரிந்து கொண்ட விதம் அல்லது கொள்கைகள் ஆகியவற்றால் வந்தவைகளாக இருக்கலாம். ஆனால் இயேசுவைத் தொழுது கொள்ளுகிறவர்கள் என்ற முறையில் நாம் அனைவருமே ஒற்றுமையாக அவரது பிள்ளைகள் என்கிற முறையில் சகோதரர்களாக சகோதரிகளாக மாறிவிடுகிறோம்.

ஒற்றுமை என்று சொல்லும் போது ஒவ்வொரு பிரிவினரும் அடுத்த பிரிவினரை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதில்லை. சிறு விஷயங்களில் விட்டுக் கொடுத்து, பெரிய விஷயங்களில் ஒத்துப் போய் இருக்கும் அனைத்துப் பிரிவினருமே ஒற்றுமைக்கு நேராகச் செல்ல முடியும். நாம் மனம் வைத்தால் ஒற்றுமையில் தேறினவர்களாக முடியும்.


சிந்தனை : உங்களால் அடுத்த பிரிவினரின் ஆலயத்தில் ஆராதனையில் பங்கு பெற முடியுமா? மனதில் வெறுப்பு இல்லாமல் அவர்களோடு சேர்ந்து தொழுதுக்கொள்ள முடியுமா?


ஜெபம் : தேவனே, பிற பிரிவினரையும் உமது பிள்ளைகளாக, எங்கள் சகோதரராக ஏற்றுக் கொள்ளவும், உமது பிள்ளைகளாகிய நாங்கள் ஒற்றுமையில் தேறி உமது பெயரை இந்த உலகத்தில் மகிமைப்படுத்த உதவும். ஆமென்.


For Audio Tracks visit : DD-Tamil

For Older Posts visit : http://dropindeocean.blogspot.com/
--
http://micyell.com
micyellmedia@gmail.com
Mobile : 09994258788

1 comment:

JeanYES Stories said...

Dear Anna, your thoughts and reflections on oft known verses are great.