யோவான் 17:1-19
உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும்; உம்முடைய வசனமே சத்தியம். - யோவான் 17:17
திருடன் ஒருவர் குருவை சந்தித்து கேட்டான், ”குருவே என்னால் திருடாமல் இருக்க முடியவில்லை. எனக்கு வேண்டிய பணம் இருந்தாலும், திருட்டு என்பது எனது பழக்கமாக மாறிவிட்டது. நான் திருந்த விரும்புகிறேன்.” குரு சொன்னார், “உன் திருட்டுப் பழக்கத்தை நீ விட்டு விட வேண்டாம். ஆனால், உண்மையை மட்டும் தான் பேசுவேன் என்ற நல்ல பழக்கத்தை மட்டும் சேர்த்துக் கொள்” திருடன் அதிக மகிழ்ச்சியுடன் போனான். வழியில் இருந்த ஒரு நகைக்கடை அவன் கவனத்தைக் கவர்ந்தது. விலைமதிப்புள்ள ஒரு வைரத்தைத் திருடிவிட்டு அடுத்த ஊருக்குச் செல்வதற்காகக் காத்திருந்தான். உடன் இருந்த காவலர் ஒருவர் இவனிடம் ”நீங்கள் எங்கே இருந்து வருகிறீர்கள்? எங்கே போகிறீர்கள்?” என்று கேட்க. அவனும் ”நான் நகைக்கடையிலிருந்து வருகிறேன்.” என்றான். இன்னொரு சிறு குழந்தை “உங்க பையில என்ன இருக்குது என்று கேட்கவும் ”வைரம் இருக்குது” என்றான் திருடன். “வைரம் அதிக விலையா இருக்குமே?” என்று கேட்டார் காவலர். “இது எனக்கு இலவசமாக் கிடைச்சுது” என்று உண்மையைச் சொல்ல, காவலர் தன் கடமையைச் செய்தார். உண்மையாக இருந்ததாலும், பழைய குற்றங்களை ஒத்துக்கொண்டு திருட்டுப் பொருட்களைத் திருப்பிக் கொடுத்ததாலும் சிறையிலிருந்து சில ஆண்டுகளிலேயே விடுதலை கிடைத்தது. மீண்டும் குருவை சந்தித்து நன்றி சொன்னான் திருடன்.
நம் வாழ்விலும் உண்மை இருந்தால் அதுவே நம்மைப் பரிசுத்தப்படுத்திவிடும். ஆண்டவருடைய வேதம் தான் உண்மையானது. அதனால் தான் அதற்கு சத்திய வேதம் என்ற பெயர் கொடுக்கப்பட்டிருக்கின்றது. வேதத்தின் மூலமாகவே கடவுள் நம்மைப் பரிசுத்தப்படுத்துகிறார். நாம் வசனங்கள் நம்மை சுத்தப்படுத்தவும், அதன்படி நடக்க நம்மை ஒழுக்கப்படுத்தவும் வேண்டும்.
சிந்தனை : நம் அழுக்கு வாழ்வில் பரிசுத்த வசனத்தை அனுமதிக்காமல் சுத்தம் செய்தல் நடக்காது.
ஜெபம் : வார்த்தையாகிய கடவுளே, நீர் என்னைப் பரிசுத்தப்படுத்தும். உம் வார்த்தையை நான் என்னை சுத்திகரிக்க விட்டுக் கொடுக்கிறேன். ஆமென்.
For Audio Tracks visit : DD-Tamil
micyellmedia@gmail.com
Mobile : 09994258788
No comments:
Post a Comment