யோவான் 21:15-25
என்னை நேசிக்கிறாயா என்று அவர் மூன்றாந்தரம் தன்னைக் கேட்டபடியினாலே பேதுரு துக்கப்பட்டு: ஆண்டவரே, நீர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர், நான் உம்மை நேசிக்கிறேன் என்பதையும் நீர் அறிவீர் என்றான். - யோவான் 21:17
ஒரு சிறுவன் வீட்டுக்கு வாங்கிச் சென்று கொண்டிருந்த முட்டைகளை தரையில் போட்டு உடைத்துவிட்டான். அவன் அழுகையை அடக்கிக் கொண்டு காத்துக் கொண்டிருந்தான். சிலர் அங்கே கூட்டமாகச் சேர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். சிலர் அந்த சிறுவனுக்காக அனுதாபப்பட்டனர். அந்தக் கூட்டத்தில் ஒருவர் அந்தப் பையனின் கையில் பத்து ரூபாயை வைத்துவிட்டு கூட்டத்தைப் பார்த்துச் சொன்னார், “நான் இந்தப் பையன் மேல் பத்து ரூபாய் அளவுக்கு அக்கறை காட்டுகிறேன். நீங்கள் எவ்வளவு அக்கறை வைத்திருக்கிறீர்கள் என்பதைக் காட்டுங்கள்” என்று சொன்னார்.
இயேசு பேதுருவிடம் ”நீ எந்த அளவுக்கு அன்பு வைத்திருக்கிறாய்?” என்று மூன்று தடவைகள் கேட்டார். பேதுருவோ ஆண்டவரே நான் உம்மை நேசிக்கிறேன் என்பது உமக்குத் தெரியும் என்று பதில் சொல்கிறார். மூன்றாம் முறை கேட்ட போதோ அவர் துக்கப்பட்டார். இயேசு பேதுருவிடம் ”என் ஆடுகளை மேய்க்கும் அளவுக்கு, உன்னையை நீ வெறுக்கும் அளவுக்கு நேசிக்கிறாயா?” என்று கேட்டார்.
வயோதிக காலத்தில் பேதுரு தனது விருப்பப்படி எதையும் செய்ய முடியாது என்பதையும், அவர் தான் திருச்சபையைக் கட்ட வேண்டும், அவர் தான் இயேசுவின் ஆடுகளை மேய்க்க வேண்டும் என்றும் இயேசு சொன்னார்.
இன்றும் இயேசு நம்மைப் பார்த்து நீ என் மேல் எவ்வளவு நேசம் வைத்திருக்கிறாய் என்று கேட்டால் என்ன பதில் சொல்ல் முடியும்? நம்மையே வெறுத்து, அவரது பணியைச் செய்யும் அளவுக்கு அவரை நேசிக்கிறோமா?
சிந்தனை : ஐ லவ் யூ ஜீசஸ் என்று சொல்வதற்கு அவர் ஒரு வியாபாரப் பொருளல்ல. இயேசுவை நேசித்தல் என்பது தியாகம் ஆகும்.
ஜெபம் : அன்பின் கடவுளே, உம்மை நேசிக்கவும் அதை செயல்களில் காட்டவும் எனக்கு உதவி செய்யும். ஆமென்.
For Audio Tracks visit : DD-Tamil
micyellmedia@gmail.com
Mobile : 09994258788
No comments:
Post a Comment