யோவான் 19:1-16
பிலாத்து அவரை விடுதலைபண்ண வகைதேடினான். யூதர்கள் அவனை நோக்கி: இவனை விடுதலைபண்ணினால் நீர் இராயனுக்குச் சிநேகிதனல்ல; தன்னை ராஜாவென்கிறவனோ அவன் ராயனுக்கு விரோதி என்று சத்தமிட்டார்கள். - யோவான் 19:12
ஒரு மத்திய வயது மனிதனின் மனைவியும் மகளும் அவரை அதிகம் நேசித்ததால் அவரது வெளிப்புறத் தோற்றத்தையும் அழகாக மாற்ற வேண்டும் என்று நினைத்தார்கள். மனைவி அவரது தலையிலுள்ள கருப்பு முடிகளை எல்லாம் அகற்றிவிட்டால் இன்னும் கம்பீரமாகத் தெரிவார் என்று நினைத்து எல்லா கருப்பு முடிகளையும் பிடுங்கி எறிந்துவிட்டார். அவர் மகளோ அப்பாவின் வெள்ளை முடிகளைப் பிடுங்கிவிட்டால் அவர் இளமையாகத் தெரிவார் என்று நினைத்து மீதம் இருந்த முடிகளையும் அகற்றிவிட அவர் மொட்டைத் தலையாராக மாறிவிட்டார்.
பிலாத்துவின் மனைவி இயேசுவைப் பற்றிய கனவினால் கஷ்ட்டப்பட்டதாகச் சொல்லி அனுப்பினார். பிலாத்துவுக்கும் இயேசுவின் மேல் எந்த குற்றமும் இல்லை என்பது தெரிகின்றது. ஆனால் யூத மதத்தலைவர்கள் பொறாமையினால் தான் இயேசுவைக் கொலை செய்ய நினைக்கிறார்கள் என்பது தெரிந்தும் அவரால் இயேசுவை விடுதலை செய்ய முடியவில்லை. பிலாத்துவால் தனது பதவியை விட்டுக் கொடுக்கவோ, ரோமப் பேரரசனின் பகையை சம்பாதித்துக் கொள்ளவோ மனம் ஒத்துக் கொள்ளவில்லை. எனவே தான் மனைவி, உண்மை, யூதர்கள், பதவி, அமைதி போன்ற அழுத்தங்களுக்கு இடம் கொடுத்து கடைசியில் எளிதான முடிவை எடுத்துவிட்டார். இயேசுவைக் கை கழுவி விட்டார்.
நம் வாழ்விலும் ஏற்படும் பல அழுத்தங்களில் இயேசுவைக் கையைக் கழுவிவிட்டு நம் விருப்பப்படி வசதியான வாழ்க்கை வாழுவது எளிதாகத் தெரியலாம். ஆனால் நமக்கு மீண்டும் இதைவிடப் பெரிய அழுத்தங்கள் வராமல் போகாது. இயேசு கூட இருந்தால் அழுந்தங்களைச் சமாளிக்க உதவியும் பலனும் ஆலோசனையும் தருவார். ஆனால் அவரை சிறு அழுத்தங்களுக்கே கையைக் கழுவினால் வாழ்க்கையில் பெரும் அழுத்தங்கள் நம்மை அடித்துக்கொண்டே போய்விடும்.
சிந்தனை : கடவுளை விட மேலான ஒரு சக்தியோ அழுத்தமோ இந்த உலகத்தில் நமக்கு வந்துவிட முடியாது. மேலும் நம்மால் தாங்கமுடியாத அளவுக்கு அழுத்தத்தைத் தருவதில்லை என்று கடவுள் நமக்கு வாக்குக் கொடுத்திருக்கிறார்.
ஜெபம் : ராஜாதி ராஜாவே, எந்தக் காரணத்துக்காகவும் உம்மைக் கைகழுவி விடாமல், உமக்காக கடைசிவரைக்கும் உறுதியாக நிற்க கிருபை தாரும். ஆமென்.
For Audio Tracks visit : DD-Tamil
micyellmedia@gmail.com
Mobile : 09994258788
No comments:
Post a Comment